Posts

Showing posts from June, 2022

கோவில் 22 - கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தர்மலை முருகன் திருக்கோவில்

Image
 தினம் ஒரு முருகன் ஆலயம்-22 நினைத்ததை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தர்மலை முருகன் திருக்கோவில்  30.6.2021 புதன்  அருள்மிகு கந்தர்மலை முருகன் திருக்கோவில் சுண்டக்காய்பட்டி-635123 காவேரிப்பட்டணம்  கிருஷ்ணகிரி மாவட்டம்  இருப்பிடம்: கிருஷ்ணகிரி 24 கிமீ, காவேரிப்பட்டணம் 12 கிமீ   மூலவர்: முருகன் தலமகிமை: அதிசயங்களும், அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் முருகன் ஆலயங்களில் ஒன்றுதான் ‘கந்தர்மலை முருகன் கோவில். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் இருந்து 12 கிமீ தொலைவில் சுண்டக்காய்பட்டியின் மலை மேல் கந்தர்மலை முருகன் கோவில் அமைந்துள்ளது, இம்மலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக மேலே உள்ள குகையில் ருத்திராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் போன்ற மகான்கள் கந்தர்மலை முருகனை தரிசனம் செய்துள்ளார்கள் என்பது சிறப்பு.  இங்குள்ள வள்ளி குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை . இந்தக் குளத்து நீரை பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பத

கோவில் 387 - மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-387 சக்தியை தந்தருளும் மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில்  30.6.2022 வியாழன் அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோவில் தல்லாகுளம் ராஜாஜி பார்க்   மதுரை-625002 இருப்பிடம்: மதுரை-கோவில் 4 கிமீ மூலவர்: பூங்கா முருகன்  தலமகிமை: மதுரை மாநகரின் மையத்தில் 4.5 தொலைவில் உள்ள தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் புடை சூழ அழகிய தோற்றத்தில் பூங்கா முருகன் கோவில் உள்ளது. நகரத்தினுள் இருப்பதால், கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பது சிறப்பு. முருகனுக்குரிய விசேஷ நாட்களில் அல்ங்காரம் அர்ச்சனைகள் நடைபெறுவது சிறப்பு. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேக அலங்காரம் சிறப்பாக நடிப்றும். பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தன்று வடை மாலை சென்று சாத்துதல் சிறப்பம்சம். அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகிறது, தல வரலாறு: சுமார் 50 வருட சிறப்பு மிக்க பழமையான கோவில் என்று பக்தர்கள் கூறுகின்றனர். தல அமைப்பு: திருக்கோவில் ராஜ

கோவில் 21 - சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-21 செவ்வாய் தோஷம் நீக்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோவில் 29.6.2021 செவ்வாய் அருள்மிகு சதுர்முக முருகன் திருக்கோவில் சின்னாளப்பட்டி-624302  திண்டுக்கல் மாவட்டம் இருப்பிடம்: திண்டுக்கல்லிருந்து 11 கிமீ  அலைப்பேசி: 9944059802 & 9003754242 மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வேங்கை மரம் தலமகிமை: திண்டுக்கல்லில் இருந்து 11 கி.மீ. தொலைவில்  சின்னாளப்பட்டியில் சதுர்முக முருகன் (நான்கு முகங்கள் உடைய முருகன்) கோவில் அமைந்துள்ளது. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சி தரும் ஒரே சிறப்பு தலம் இதுவாகும். இப்படி நான்கு முகங்களுடன் முருகக்கடவுளைத் தரிசிப்பது மிகவும் விசேஷம். வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியில் சூரசம்ஹ

கோவில் 386 - சென்னை சோழிங்கங்கநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-386 இகபர சௌபாக்கியம் அருளும்  சென்னை சோழிங்கங்கநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்  29.6.2022 புதன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சோழிங்கங்கநல்லூர்  சென்னை-608703 இருப்பிடம்: சென்னை அடையாறு-கோவில் 13 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி  தேவி: வள்ளி, தெய்வானை  தலமகிமை: சோழிங்கங்கநல்லூர்-பழைய மகாபலிபுரம் சாலையில், அடையாறில் இருந்து தெற்கே 13 கிமீ தோலைவில் சிறப்பு மிக்க சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அம்மன் பின்புறம் தனி ஆலயம் உள்ளது. திருவோடு மரம் இங்கு சிறப்பு வாய்ந்தது. திருவோடு பழங்களின் ஓடுகள் மகான்களால் பிக்ஷை பாத்திரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. மகா சிவராத்திரியின் போது சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோவிலுக்கு அருகில் புற்று மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்படும் மற்றொரு மிகவும் சக்தி வாய்ந்த கோவிலும் உள்ளது, இது 600 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாகவும், சமீபத்தில் புதுப

கோவில் 20 - தென்காசி ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-20 எடுத்துக் கொண்ட காரியங்களை நிறைவேற்றும் தென்காசி ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 28.6.2021 திங்கள் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆய்க்குடி-627852  தென்காசி மாவட்டம்  இருப்பிடம்: செங்கோட்டை 13 கிமீ  மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி (ஹரிராமசுப்பிரமணியர்) உற்சவர்: முத்துக்குமாரர் தல விருட்சம்: பஞ்சவிருட்சம் (அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மா விலங்கு) தீர்த்தம்: அனுமன் நதி பாடியவர்:  அருணகிரியார் திருப்புகழ்  (1) தலமகிமை: தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 13 கிமீ தொலைவில் அனுமன் நதிக்கரையில் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்ற பிரசித்திப் பெற்ற முருகன் திருத்தலம் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பழப்பாயசம் (படிப்பாயசம்) நைவேத்தியம் செய்து வழிபட்டால் வேண்டும் வரங்கள் விரைவில் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும் என்பது நம்பிக

கோவில் 385 - கடலூர் ராஜேந்திரபட்டினம் (எருக்கத்தம்புலியூர்) திருக்குமாரசுவாமி கோவில் முருகன்

Image
 🙏🙏                                                                                                                                                         தினம் ஒரு முருகன் ஆலயம்-385 [திருப்புகழ் தலம்] பேச்சில் குறைபாடுள்ளவர்களை குணமாக்கும் கடலூர் ராஜேந்திரபட்டினம் (எருக்கத்தம்புலியூர்) திருக்குமாரசுவாமி கோவில் முருகன் 28.6.2022 செவ்வாய் அருள்மிகு திருக்குமாரசுவாமி திருக்கோவில் திருப்புகழ் தலம் எருக்கத்தம்புலியூர் ராஜேந்திரபட்டினம்-608703 கடலூர் மாவட்டம்  இருப்பிடம்: விருத்தாசலம்-ஜெய்ங்கொண்டம் சாலையில் கோவில் 12 கிமீ மூலவர்: திருக்குமாரசுவாமி, சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் அம்மன்: வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி, அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை நாயகர்: குமரன் (முருகப்பெருமான்) தலவிருட்சம்: வெள்ளெருக்கு மரம் தீர்த்தம்: கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் புராணப்பெயர்: எருக்கத்தம்புலியூர், வெள்ளெருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், யாழ்ப்பாணாயன்பட்டிணம் பாடல் தலம்: திருஞானசம்பந்தர், அருண்கிரிநாதர், வள்ளலார்  தலமகிமை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில், 12 கிமீ-ல

கோவில் 19 - வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                             தினம் ஒரு முருகன் ஆலயம்-19 தீராத குறைகளையும் தீர்க்கும் வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில் 27.6.2021 ஞாயிறு அருள்மிகு தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில் புது வசூர்  வேலூர்-632009   இருப்பிடம்: வேலூரிலிருந்து கோவில் 8 கிமீ  மூலவர்: வடிவேல் சுப்பிரமணியர் தேவி: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: அத்தி மரம், ஆலமரம், அரச மரம், நாவல்மரம் தீர்த்தம்: தீர்த்தகிரி தலமகிமை: சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து 6 கிமீ. தொலைவில் உள்ள சத்துவாச்சாரி அருகே இருக்கும் வள்ளலார் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும். அதன் தென்புறம் 2 கிமீ-ல் உள்ள  புது வசூரில் இருக்கும் மலை மீது தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இருப்பதாக கூறப்படுவது சிறப்பம்சம். முருகன் சிலைக்கு சரி சமமான உயரத்தில் வள்ளி சிலை இருப்பது எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு தீர்த்தகிரியில் உண்டு.

கோவில் 384 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-384 தெய்வீக உணர்வை ஏற்படுத்தி அருளுகின்ற கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் 27.6.2022 திங்கள் அருள்மிகு குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் கொடைக்கானல்-624101 திண்டுக்கல் மாவட்டம்  இருப்பிடம்: கொடைக்கானல் நகரிலிருந்து 3 கிமீ மூலவர்: குறிஞ்சி ஆண்டவர்  தலமகிமை: மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தக் கோவிலில் இருந்து பார்த்தால் வைகை அணையையும் பழநி மலைத்தொடரையும் பார்க்க முடியும். தற்போதும் கோவிலின் இடதுபுறத்தில் இருந்து பார்த்தால் பழநி மலைக்கோவிலை காணலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், குறிஞ்சி ஆண்டவரான முருகனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொடைக்கானல் குறிஞ்சி

கோவில் 18 - திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-18 குழந்தைகளைக் காக்கும் திருவுருமாலை என்று சிறப்பிக்கப்படும் திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் 26.6.2021 சனி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குறுக்குத்துறை  திருநெல்வேலி-627001   இருப்பிடம்: திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம்/ரயில் நிலையம் 2.5 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தீர்த்தம்: தாமிரபரணி தலமகிமை: திருநெல்வேலி நகரத்தில் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் குறுக்குத்துறை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த முருகனை தரிசித்தால், பழநி மலை முருகனையும், திருச்செந்தூர் முருகனையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். குறுக்குத்துறையில் உள்ள பாறைப்பகுதிக்கு `திருவுருமாமலை' என்று பெயர். இங்குள்ள கற்பாறைகள் தெய்வ திருவுருவங்களை செதுக்கிட ஏற்றதாக இருந்ததால், இங்கு சிற்பிகள் பாறைகளை செதுக்கி உருவம் கொடுத்தார்கள் என்பதால் திருவுருமாமலை என்ற பெயர் வழங்கப் பெற்றது. தி

கோவில் 383 - சென்னை பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                  தினம் ஒரு முருகன் ஆலயம்-383 பிரதோஷ நன்னாள் கார்த்திகை திருநாளில் ஆனந்தம் அருளும் சென்னை பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோவில் 26.6.2022 ஞாயிறு அருள்மிகு ஆறுபடை வீடு முருகன் திருக்கோவில் பெசன்ட் நகர்  சென்னை-600090 இருப்பிடம்: சென்னை பெசன்ட் நகரிலிருந்து 1 கிமீ மூலவர்: ஆறு படை வீடு முருகன் தலமகிமை: சென்னை நகரில் உள்ள பெசன்ட்  நகரில் முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆறுபடை வீடு முருகன் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இக்கோவில், முருகப்பெருமானின் அனைத்து அறுபடை வீட்டு கருவறைகளைக் கொண்டுள்ளது. இந்த கோவில் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த கோவிலிலிருந்து சுமார் 1.5 கிமீ  தூரத்தில் பாம்பன் சுவாமிகளின் ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது.   அந்த வட்டாரத்தில் அறுபடை முருகன் கோவிலின் கட்டுமானம்  இருக்கப்போகிறது என  நீண்ட காலத்திற்கு முன்பே பாம்பன் சுவாமிகள் சரியாக கணித்துரிந்தார். தல வரலாறு: முருகப்பெருமானின் ஆறு  கோவில்கள் முருகனின் மிக

கோவில் 17 - தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நயினார் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-17 தோஷங்கள் அனைத்தும் நீக்கி அருளும் தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நயினார் கோவில் 25.6.2021 வெள்ளி அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோவில் தீர்த்தத்தொட்டி கோடங்கிபட்டி-625547   தேனி மாவட்டம்  இருப்பிடம்: தேனி-போடி சாலையில் கோவில் 9 கிமீ மூலவர்: விருப்பாச்சி ஆறுமுக நயினார்  உற்சவர்: சுப்பிரமணியர்  தல விருட்சம்: வில்வமரம் தீர்த்தம்: முருக தீர்த்தம் (தீர்த்தத்தொட்டி) தலமகிமை: தேனி மாவட்டம் தேனி-போடி சாலையில் 9 கிமீ-ல் உள்ள கோடாங்கிபட்டியில் உள்ள தீர்த்தத்தொட்டி பகுதியில், விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோவில் உள்ளது. கோவிலுக்கு அடியில் ‘தீர்த்தம்’ ஒன்று வற்றாமல் எப்போதும் சுரந்தபடியே இருக்கிறது. இதன் பெயராலேயே இத்தலம் ‘தீர்த்தத்தொட்டி’ எனப்படுகிறது.  முன்னொரு காலத்தில் அசுரனை வதம் செய்யச் சென்ற சப்த கன்னிமார்களில் ஒருவர், தவறுதலாக தவம் செய்துகொண்டிருந்த மகரிஷியை அழித்துவிட்டார்

கோவில் 382 - முருகப்பெருமான் நண்டுடன் காட்சியருளும் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-382 கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமான் நண்டுடன் காட்சியருளும் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில் 25.6.2022 சனி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில் திருந்துதேவன்குடி-612105  திருவிடை,மருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் இருப்பிடம்: கும்பகோணம் 12 கிமீ மூலவர்: கற்கடேஸ்வரர் அம்மன்: அபூர்வநாயகி, அருமருந்து நாயகி உற்சவர்: சோமாஸ்கந்தர் உப மூலவர் – முருகப்பெருமான் தல விருட்சம்: நங்கை மரம் தீர்த்தம்: நவபாஷாண தீர்த்தம் புராணப்பெயர்: கற்கடேஸ்வரம் பாடியவர்: திருஞானசம்பந்தர்  தலமகிமை: மயிலாடுதுறை-திருவாரூர் வழியில் பூந்தோட்டம் என்ற இடத்திலிருந்து மேற்கே சுமார் 6 கிமீ தொலைவில் ஈசனின் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில் சிறப்புற அமைந்துள்ளது. கும்பகோணத்திலிலிருந்தும் இக்கோவிலுக்கு செல்லலாம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 42-வது தலம் ஆகும்.  இது ஒரு சிவஸ்தலமாக இருந்தாலும், முர

கோவில் 16 - தக்கலை குமாரகோவில் (வேளிமலை) குமார சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-16 முன் வினைகள் அகற்றும் தக்கலை குமாரகோவில் (வேளிமலை)  குமார சுவாமி கோவில் 24.6.2021 வியாழன் அருள்மிகு குமார சுவாமி திருக்கோவில் குமாரகோவில் (வேளிமலை)-629175   தக்கலை கன்யாகுமரி மாவட்டம்  இருப்பிடம்: தக்கலை 5 கிமீ, நாகர்கோவில் 13 கிமீ  மூலவர்: குமார சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: மணவாள குமரன்  தல விருட்சம்: வேங்கை மரம் தீர்த்தம்: தெப்பக்குளம் புராணப் பெயர்: வேளிமலை ஊர் பெயர்: குமாரகோவில் தலமகிமை: கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-மார்த்தாண்டம் சாலையில் தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள குமாரகோவில் என்ற வேளிமலை தலத்தில் சிறப்பு மிக்க குமார சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்தபோது, அதற்காக வேள்வி நடைபெற்ற மலை வேள்விமலை எனக் கூறப்படுகிறது. வேள்விமலையே பின்னாளில் வேளிமலையானது என்கின்றனர். முருகப்பெருமானின் திருமண வைபவம் நடந்த அந்த இடத்திலே இன்று ஏராளமான திருமணங்

கோவில் 381 - காசிபாளையம் மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-381 திருப்பம் தருவான் காசிபாளையம் மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி கோவில் 24.6.2022 வெள்ளி அருள்மிகு மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி திருக்கோவில் குமரன்கரடு,  காசிபாளையம்-638454 கோபிசெட்டிபாளையம் வட்டம்,  ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: கோபி 10 கிமீ, சத்தியமங்கலம் 16 கிமீ தொடர்பு: 9786285405/8248004435 மூலவர்: மூன்று முகம் முத்துவேலாயுத சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்-சத்தியமங்கலம் சாலையில் கோபியிலிருந்து மேற்கே 10 கிமீ தொலைவிலும் சத்தியிலிருநது கிழக்கே 16 கிமீ தொலைவிலும் பவானி ஆற்றங்கரையில் உள்ள காசிபாளையம் எனும் ஊர் உள்ளது. இவ்வூரின் கிழக்கே சுமார் 1 கிமீ தொலைவில் சத்தி-நெடுஞ்சாலையின் வடக்கு பகுதியில் மூன்று சிறு சிறு குன்றுகள் கிழக்கு மேற்காக வரிசையாக அமைத்துள்ளன. அதில் மேற்குப் பகுதியில் உள்ள குன்றில் அ/மிக மாதேஸ்வரன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கிழக்கு