Posts

Showing posts from May, 2022

பகுதி 356 - இலங்கை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-356 வாழ்வில் திருப்பம் தரும் இலங்கை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் 30.5.22 திங்கள் அருள்மிகு சித்திரவேலாயுத சுவாமி திருக்கோவில் வெருகல்  திருகோணமலை மாவட்டம் இலங்கை மூலவர்: சித்திரவேலாயுத சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தீர்த்தம்: வெருகல் கங்கை   தலமகிமை: வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் திருகோணமலை மாவட்டத்தின் தென் எல்லையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வட எல்லையிலும் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே கிழக்கில் தாமரைப் பொய்கையும், ஆலயத்தைச் சூழ்ந்து ஆல், வில்வம், மருதை, இலுப்பை முதலான நிழல் தரும் விருட்சங்களும் நிறைந்துள்ளன.  மாணிக்கக் கங்கை ஓரத்தில் சிறப்புமிகு கதிர்காமம் அமைந்திருப்பது போல் வெருகல் கங்கை ஓரத்தில் பெருமைமிகு வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது சிறப்பு. .கதிர்காமத்தில் கதிரமலை, வள்ளிமலை அமைந்திருப்பது போல் இங்கு வெ

பகுதி 355 - இலங்கை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-355 பிதிர் கடனை நிறைவேற்ற அருளும் இலங்கை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவில் 29.5.22 ஞாயிறு அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோவில் திருக்கோவில்  அம்பாறை மாவட்டம் இலங்கை மூலவர்: சித்திர வேலாயுத சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை  தல மகிமை: சிவபூமி என்றும் பூலோக சொர்க்கம் என்றும் போற்றப்படும் இலங்கைன் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தென்கிழக்கு திசையில் 71 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகு திருக்கோவில் என்னும் ஊரில் தொன்மைமிகு நாகர்முனை கந்தபாணத்துறை ஆறுமுகன் ஆலயமே இன்றைய திருக்கோவில் சித்திரவேலாயுதர் சுவாமி கோவிலாகும். இவ்வாலயம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 2012-ல் புனரமைக்கப்பட்டது. திருக்கோவில் என்ற பெயர், சாதாரண வழக்கில், சைவ, வைணவத் தமிழரால், வழிபாட்டு இடத்தைக் குறிக்கம். மட்டக்களப்புப் பகுதியில் ஆகம விதிப்படி எழுந்த முதலாவது இறைகோட்டம் என்ற பொருள

கோவில் 354 - இலங்கை முல்லைத்தீவு குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி கோவில்

Image
  🙏 🙏    தினம் ஒரு முருகன் ஆலயம்-354 எண்ணிய எண்ணங்கள் நிறைவேற்றும் இலங்கை முல்லைத்தீவு குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி கோவில் 28.5.22 சனி அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோவில் குமாரபுரம் முல்லைத்தீவு மாவட்டம் இலங்கை மூலவர்: சித்திர வேலாயுத சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: இலங்கையின் வடக்கே வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் குமாரபுரம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் முருகப்பெருமானுக்கு அர்ப்பணித்த கோவிலாகும். இந்தக் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தத் திருத்தலத்தில்தான் சூரசம்ஹாரம் நிகழ்வு முதன் முதலில் நடைபெற்றது என்பது வரலாற்றின் சிறப்பம்சம். வரலாற்றுப் புகழ் வாய்ந்த குமாரபுரம் சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் உருவாகி கொண்டிருக்கும் 31 ½ அடி உயர சித்திரத்தேருக்கு பவளக்கால் வைக்கும் வைபவம் 17.2.2022 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அன்னதானம் சிறப்பாக நடந்தேறியது. புதிய வசந்த மண்டபம் கட்டப்படுகிறது, தலவரலாறு: வன்னிய மன்னர்களாட்சியில் நிர்மாணிக்கப்பட்ட புர

கோவில் 353 - இலங்கை மாதம்பை (சிறிய கதிர்காமம்) கலியுகவரத முருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-353 நம்பி வரும் பக்தர்கள் நலன் காக்கும் இலங்கை மாதம்பை (சிறிய கதிர்காமம்) கலியுகவரத முருகன் கோவில் 27.5.22 வெள்ளி அருள்மிகு மாதம்பை முருகன் (சிறிய கதிர்காமம்) திருக்கோவில் மாதம்பை புத்தளம்  இலங்கை மூலவர்: மாதம்பை கலியுகவரத முருகன்  தல மகிமை: இலங்கை புத்தளம் மாவட்டம் மாதம்பை பகுதியில் கொழும்பு-.புத்தளம் பிரதான சாலையில் அமைந்துள்ள மாதம்பை கலியுகவரத முருகன் திருக்கோவில், நவீன திராவிட பாணியில் மிகவும் வண்ணமயமான, நேர்த்தியான கோவிலாகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் இலங்கையின் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கோவிலை நினைவு படுத்துவதால், இந்த திருக்கோவில் சிறிய கதிர்காமம் கோவில் (புஞ்சி கதிர்காமம் கோவில்) என்றும் அழைக்கப்படுகிறது. தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் அதிக அளவில் வருவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சம். இலங்கையில் சுமார் 4000 இந்து கோவில்கள் இருப்பது மிக சிறப்பு. பலமுறை போரினால் இடிக்கப்பட்டும்,

கோவில் 352 - இலங்கை கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                           தினம் ஒரு முருகன் ஆலயம்-352 இகபர சௌபாக்கியங்கள் தரும் இலங்கை கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் 26.5.22 வியாழன் அருள்மிகு புதிய கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில் பம்பலப்பிட்டி  கொழும்பு  இலங்கை மூலவர்: கதிர்வேலாயுத சுவாமி (புதிய) மற்றும் வேல் தல மகிமை: சிங்களவர்கள் அதிகம் வாழும் இலங்கை தலைநகர் கொழும்பு மையப்பகுதியில் புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், பழைய கதிர்வேலாயுத சுவாமி கோவில் என்ற இரண்டு சிறப்பு மிக்க முருகப்பெருமான் கோவில்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்டுள்ளன். கதிர்காம கந்தன் கோவிலுக்கு இணையானது என்று பெருமைப்பட சொல்லப்படுகிறது. கி.பி 1839-ல் புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டப்பட்டது. கதிர்காமத்தில் நடைபெறும் திருவிழா சமயத்தில் கொழும்பு நகரிலும் திருவிழா  நடைபெறும். புதிய கதிர் வேலாயுத சுவாமி கோவில் ஆடிவேல் விழாவின் போது திருத்தேர் கொழும்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வருவது க

கோவில் 351 - இலங்கை தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-351 சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் தவம் செய்யும் இலங்கை தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் கோவில் 25.5.22 புதன் அருள்மிகு செல்வ சந்நிதி முருகன் திருக்கோவில் தொண்டைமனாறு வல்வெட்டிதுறை  யாழ்ப்பாணம் மாவட்டம் இலங்கை இருப்பிடம்:  மூலவர்: செல்வ சந்நிதி முருகன் & வேல் தல விருட்சம்: பூவரச மரம் பிற பெயர்கள்:ஆற்றங்கரையான், சின்னகதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை  தல மகிமை: ஈழவள நாட்டின் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் விளங்குகின்றது. இலங்கை வடமாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டிதுறை தொண்டைமனாறு ஆற்றங்கரையில் செல்வ சந்நிதி முருகன் கோவில் உள்ளது. ஆற்றங்கரையான், சின்னகதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது.  மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமைந்த திருத்தலமாக அமைந்துள்ளது. ஆகம விதிக்கு அ

கோவில் 350 - இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-350  350-வது முருகன் கோவிலாக சைவத்தை போற்றும் மகேஸ்வர பூஜை நடைபெறுகின்ற இலங்கை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் 24.5.22 செவ்வாய் அருள்மிகு மாவிட்டபுரம் கந்தசுவாமி திருக்கோவில் மாவிட்டபுரம்  யாழ்ப்பாணம் இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவில்  மூலவர்: கந்தசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: காஞ்சி மாமரம் தலத்தீர்த்தம்: கீரிமலை கண்டகி தீர்த்தம் வாகனம்: இந்திர மயில் பழமை: 8-ம் நூற்றாண்டு தல மகிமை: இலங்கையில் உள்ள இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கருதப்படுகிறது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், இலங்கையின் வட மாகாணாம் பகுதியில் யாழ்பாணத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தினராலும் வணங்கபடும் த

கோவில் 349 - இலங்கை இணுவில் கந்தசுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-349 இன்னல்கள் தீர்த்தருளும் இலங்கை இணுவில் கந்தசுவாமி கோவில் 23.5.22 திங்கள் அருள்மிகு கபிலவனம் கந்தசுவாமி திருக்கோவில் இணுவில் யாழ்ப்பாணம் இலங்கை இருப்பிடம்: யாழ்ப்பாணத்திற்கு வடக்கே 5 மைல் மூலவர்: கந்தசுவாமி தல விருட்சம்: நொச்சி தலத்தீர்த்தம்: கோவில் கிணறு தல மகிமை: இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இணுவில் என்ற ஊரில் அமைந்துள்ள உள்ள இணுவில் கந்தசுவாமி கோவில்  வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களிலே  முக்கியமான ஒன்று. ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது இக்கோவிலில் 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பெருந்திருவிழா ஆண்டுக்கு ஒருமுறை இடம் பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசையன்று தீர்த்தத் திருவிழா இடம்பெறுவது விழாவின் சிறப்பமசம்.. ஆனி அமாவாச

கோவில் 348 - இலங்கை கபிலவனம் கந்தன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-348 நவகோடி சித்தர்கள் தவமிருக்கும் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான இலங்கை கபிலவனம் கந்தன் கோவில் 22.5.22 ஞாயிறு அருள்மிகு கபிலவனம் கந்தன் திருக்கோவில் கபிலவனம் (கபிலவித்தை/ கபிலித்தை)  மொனராகல மாவட்டம் இலங்கை மூலவர்: கந்தன் பழமை: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தல மகிமை: இலங்கையின் மொனராகல மாவட்டத்திலுள்ள யால சரணாலயத்தின் மத்தியில் கபிலவனம் (கபிலவித்தை) என்ற இடத்தில் மிகவும் பழைமையான சக்தி வாய்ந்த அதிசயமான ஒரு முருகன் ஆலயம் உள்ளது. இக்கோவில் கட்டடங்கள் இல்லாத, பூசாரி இல்லாத சக்தி வாய்ந்த திறந்தவெளி கோவிலாகும். 12 சிற்றாறுகளைக் கடந்து, 32 கி.மீ டிராக்டரில் பயணம் செய்தால்தான் இவ்வனத்தை அடைய முடியும். ஆதியில் கதிர்காமத்தில் போகர் பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் நவபாஷாண வேல் இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தை இன்றும் ஆதி கதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் இங்கு ந

கோவில் 347 - இந்தோனேசியா பண்டா ஆச்சே பழனி ஆண்டவர் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-347 தீராத நோய்களை தீர்க்கும் இந்தோனேசியா பண்டா ஆச்சே பழனி ஆண்டவர் கோவில் 21.5.22 சனி அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் குட ராஜா (Kuta Raja) பண்டா ஆச்சே  (Banda Aceh), இந்தோனேசியா (Indonesia) மூலவர்: பழனி ஆண்டவர் தோற்றம்: 1934 தல மகிமை: முஸ்லிம் நண்பர்கள் உட்பட அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் வருகை தந்து வேண்டி பலன் பெறும் பிரசித்தி பெற்ற பழனி ஆண்டவர் திருக்கோவில் இந்தோனேசியா நாட்டில் பண்டா ஆச்சே  பகுதியில் அமைந்துள்ளது. மசூதிகள் நிறைந்த இஸ்லாம் நாட்டில் இந்து கோவில் இருப்பதை அனைவரும் கண்டு  ஆச்சரியபடுகின்றனர். பங்குனி உத்திரம் திருவிழா இத்திருத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதிக அளவில் முருக பக்தர்கள் அலகுகள் குத்தியும், வித விதமான காவடிகள் சுமந்தும் தங்களது நேர்த்திக்கடனை பழனி ஆண்டவருக்கு செலுத்திகின்றனர். மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்தும் முருகப்பெருமானின்  அதி தீவிர பக்தர்கள

கோவில் 346 - இந்தோனேசியா சுமத்ரா மேடன் சுப்பிரமணியம் நகரத்தார் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-346 ஏற்றம் தரும் இந்தோனேசியா சுமத்ரா மேடன் சுப்பிரமணியம் நகரத்தார் கோவில் 20.5.22 வெள்ளி அருள்மிகு சுப்பிரமணியம் நகரத்தார் திருக்கோவில் மேடன் (Maden) சுமத்ரா 20112 (Sumatra 20112), இந்தோனேசியா (Indonesia) மூலவர்: சுப்பிரமணியம் பழமை: 1892 (130 ஆண்டுகள்) தல மகிமை: இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா தீவில் மேடன் நகரில், கடல் கடந்து வணிகம் செய்த செட்டியார்கள் எழுப்பிய திருக்கோவிலே,  சுப்பிரமணியம் நகரத்தார் திருக்கோவில் என்பது சிறப்பமசம். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிகத்தில் கட்டிய கோவில்களை போலவே, இங்கும் பிரம்மாண்டமாக முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் மிகுந்த கலைநயத்துடனும், பெரிய தூண்களுடனும் எழுப்பப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். முஸ்லிம் சமுதாயத்தினரும் வழிபடுகின்ற கோவில் என்பது சிறப்பம்சம்    தலவரலாறு: இந்தோனேசியா நாட்டிற்கு வாணிபம் செய்ய குடியேறிய சீரிய முருகப்பெருமான் பக்தர்களா

கோவில் 345 - வியட்நாம் ஹோ சி மின் நகர் (சைகோன்) தண்டாயுதபாணி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-345 இகபர சௌபாக்கியமருளும் வியட்நாம் ஹோ சி மின் நகர் (சைகோன்)  தண்டாயுதபாணி கோவில் 19.5.22 வியாழன் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் 66 டன் தட் தீப் (66 Ton That Thiep) ஹோ சி மின் நகர் 7000 (Ho Chi Minh City 7000), வியட்நாம் (Vietnam) மூலவர்: தண்டாயுதபாணி உற்சவர்: முருகப்பெருமான் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: வியட்நாம் நாட்டின் முக்கிய நகரமான சைகோன் (Saigon) என்று முன்னர் அழைக்கப்பட்ட, ஹோ சி மின் நகரில் உள்ள 66 டன் தட் தீப்-ல் தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது.  சிவகங்கை மாவட்டம், குறிப்பாக காரைக்குடி பகுதியில் இருந்து வணிகம் செய்ய வந்த நகரத்தார் சமூகத்தால் கட்டிய 3 திருக்கோவில்களில் முக்கியமான ஒன்று  தண்டாயுதபாணி திருக்கோவில் என்பது சிறப்பு. ஹோ சி மின் நகரம், வியட்நாமின் மிகப்பெரிய நகரமாகும். தெற்கு வியட்நாமில் அமைந்துள்ள இந்த நகரத்தை சுற்றி சைகோன் நதி ஓடுவது சிறப்பு.  இந்தக் கோவில் வியட்நாமில் உ

கோவில் 344 - வியட்நாம் ஹோ சி மின் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-344 முன்னேற்றம் தரும் வியட்நாம் ஹோ சி மின் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 18.5.22 புதன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஹோ சி மின் நகர் (Ho Chi Minh City), வியட்நாம் (Vietnam) மூலவர்: சுப்பிரமணிய சுவாமி  தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: வியட்நாம் நாட்டின் முக்கிய பகுதியான ஹோ சி மின் நகரில் உள்ள 98, நாம் கி கோர் ங்லினா தெருவில் தமிழ் கடவுள் முருகனுக்காக அமைந்துள்ள கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். ஹோ சி மின் நகரம், முன்பு சைகோன் (Saigon) என்று அழைக்கப்பட்டது, இது வியட்நாமின் மிகப்பெரிய நகரமாகும். தெற்கு வியட்நாமில் அமைந்துள்ள இந்த நகரத்தை சுற்றி சைகோன் நதி ஓடுவது சிறப்பு. கோவிலின் வலதுபுறத்தில் சிறப்பு மிக்க நவக்கிரகங்கள் 1928-ல் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இத்திருக்கோவிலுக்கு அருகிலேயே மாரியம்மன் கோவில், தண்டாயுதபாணி கோவில் என்று 2  சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. இந்த நகரில் 3 இ

கோவில் 343 - தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-343 ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் கோவில் 17.5.22 செவ்வாய் அருள்மிகு மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் திருக்கோவில் 2nd ரோடு, அப்பாட்ஸ்ஃபோர்டு  (II Road, Abbotsford), மெல்ரோஸ் (Melrose) ஜோகன்னஸ்பர்க் 2192 (Johannesburg 2192)  தென்னாப்பிரிக்கா (South Africa) மூலவர்: சிவ சுப்ரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 152 வருடங்கள் (கிபி 1870) தல மகிமை: தென்னாப்பிரிக்கா தலைநகரம்  ஜோகன்னஸ்பர்க் மெல்ரோஸ் பகுதியில் தமிழ்க் கடவுள் முருகனின் மிகவும் பிரசித்தி பெற்ற மெல்ரோஸ் சிவ சுப்ரமணியர் கோவில்  அமைந்துள்ளது. 1870-ல் இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலுக்கு இந்த ஆண்டு 152வது ஆண்டாகும். தென்னாப்பிரிக்காவில் மிகவும் பழமையான இக்கோவில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த்து என்பது சிறப்பம்சம்.  இந்த திருக்கோவிலில் சித்திரை மாத காவடி திருவிழா மிகவும் சிறப்பு