Posts

Showing posts from August, 2022

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-84 கடன், எதிரி போன்ற ரணங்களை பலியாக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில் 31.8.2021 செவ்வாய் அருள்மிகு ரணபலி முருகன் ஆலயம் பெருவயல்-623513 ராமநாதபுரம் மாவட்டம் இருப்பிடம்: ராமநாதபுரத்திலிருந்து 12 கிமீ மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி (ரணபலி முருகன்) தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் தல விருட்சம்: மகிழ மரம் தீர்த்தம்: சரவணப்பொய்கை தலமகிமை: ராமநாதபுரம்-தேவிபட்டிணம் சாலையில் 9 கிமீ தொலைவில் பெருவயல் விலக்கு உள்ளது. அங்கிருந்து 3 கிமீ தூரத்தில் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே முருகனின் வேல் காட்சி தரும் பெருவயல் ரணபலி முருகன் கோவில். இத்தலத்தில் முருகன் சிவசுப்ரமணிய சுவாமியாக வள்ளி, தெய்வானையுடன் அருள்கின்றார். பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து (நீக்கி), சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்' என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும். 40 வருடங்களுக்கு முன்பு இக்கோவிலுக்கு வந்த திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், இங்குள்ள முருகனின் தி

கோவில் 449 - விழுப்புரம் மாவட்டம் டி.இடையாறு மருந்தீசர் கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-449 விநாயகர் சதுர்த்தி திருநாளில் பாலகணபதி கையில் லட்டும் பலாச்சுளையுடனும், சண்முகர் கலியுக ராமப்பிள்ளையாராக அருளுகின்ற விழுப்புரம் மாவட்டம் டி.இடையாறு மருந்தீசர் கோவில் 31.8.2022 புதன் அருள்மிகு மருந்தீசர் (கிருபாபுரீஸ்வரர்) திருக்கோவில் டி.இடையாறு-607209 திருக்கோவிலூர் தாலூகா விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: திருக்கோவிலூர் 25 கிமீ,விழுப்புரம் 30 கிமீ,திருவெண்ணெய்நல்லூர் 6 கிமீ மூலவர்: மருந்தீசர், கிருபாபுரீஸ்வரர், இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர் இறைவி: சிற்றிடைநாயகி, ஞானாம்பிகை நாயகர்கள்: 1. கலியுக ராமப்பிள்ளையார் (சண்முக சுப்பிரமணியர்) 2. பாலகணபதி (பலாப்பழ விநாயகர்) தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: மருதமரம் தீர்த்தம்: சிற்றிடை தீர்த்தம் புராணப்பெயர்: திருஇடையாறு, திருவிடையாறு பாடல்: சுந்தரர், திருநாவுக்கரசர், வள்ளலார் தலமகிமை: திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் சாலையில் சித்தலிங்க மடத்தையடுத்து டி.இடையாறு மருந்தீசர் கோவில் அமைந்துள்ளது. சிவக்குடும்பமே அருள்புரியும் சிறப்பு தலம் இது. சுவாமி பெயர்க

கோவில் 83 - நீலகிரி மாவட்டம் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-83 பசிப்பிணி தீர்க்கும் நீலகிரி மாவட்டம் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி கோவில் 30.8.2021 திங்கள் அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி ஆலயம் மஞ்சூர்-643219 குந்தா தாலூகா நீலகிரி மாவட்டம் இருப்பிடம்: ஊட்டியிலிருந்து 32 கிமீ (குந்தா வழி) மூலவர்: தண்டாயுதபாணி சுவாமி தல விருட்சம்: அரச மரம் சிறப்பு: அன்னதானம் தலமகிமை: நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து குந்தா வழியாக 32 கிமீ தொலைவில் மஞ்சூர் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான், பழனியைப் போன்றே தண்டாயுதபாணி சுவாமியாகக் காட்சியருள்கிறார். தினம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது சிறப்பு. அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் அன்னதானம் செய்தால் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவதாக ஐதீகம் உள்ளது. தல வரலாறு: 1936-ம் ஆண்டு கீழ் குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு

கோவில் 448 - செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-448 இகபர சுகம் அருளும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆறுமுகசுவாமி கோவில் 30.8.2022 செவ்வாய் அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோவில் மதுராந்தகம்-603306 செய்யூர் தாலூகா செங்கல்பட்டு மாவட்டம் இருப்பிடம்: சென்னை 75 கிமீ, மதுராந்தகம் பேருந்துநிலையம் அருகில் மூலவர்: ஆறுமுகசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை ஈசன்: பாண்டீஸ்வரர் பாடல்: அருணகிரியார் திருப்புகழ் (1 பாடல்). தலமகிமை: சென்னையிலிருந்து 75 கிமீ தொலைவிலுள்ள மதுராந்தகம் பகுதியில் இரண்டு திருப்புகழ் தலங்கள் அமைந்துள்ளன. 1. மதுராந்தகம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள ஆறுமுகசுவாமி திருக்கோவில் 2. புலிப்பரக் கோவில் எனும் சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (இதுவே 'வடசிற்றம்பலம்' எனும் தலமுமாகும்). வெகு காலமாக மதுராந்தகம் முருகன் ஆலயமே வட சிற்றமபலம் என்று தவறாகக் கருதப்பட்டு வந்தது, திரு வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் அரிய ஆய்வினால் 'வட சிற்றம்பலம்' எனும் தலம் ‘புலிப்பரக் கோவிலில் அமைந்துள்ள அபிதகுஜாம்பிகை சமேத ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயமே' என்று கண்டறி

கோவில் 82 - காஞ்சிபுரம் மாவட்டம் பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணி கோவில்

Image
  🙏   🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-82 மனதுக்கு அமைதி தரும் காஞ்சிபுரம் மாவட்டம் பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணி கோவில் 29.8.2021 ஞாயிறு அருள்மிகு நடுபழனி தண்டாயுதபாணி ஆலயம் பெருக்கரணை-603309 செய்யூர் தாலூகா காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பிடம்: மேல்மருவத்தூரிலிருந்து 11 கிமீ மூலவர்: தண்டாயுதபாணி (மரகத மூலவர்) நிறுவியவர்: முத்துசுவாமி சித்தர் கோவில் பெயர் சூட்டியவர்: காஞ்சி பெரியவர் சிறப்பு: 45 அடி உயர முருகன் கோவில் தலமகிமை: காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரிலிருந்து அச்சிறுபாக்கம் செல்லும் வழியில் அச்சிறுபாக்கத்திற்கு இரண்டு கிமீ முன்னால் இடது புறத்தில் நடுபழனி முருகன் கோவில் வளைவு காணப்படும். அங்கிருந்து 6 கிமீ தொலைவில் பிரசித்திப் பெற்ற பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. பழனியில் தண்டாயுதபாணியை போலவே இங்குள்ள மரகத கல்லிலான தண்டாயுதபாணி இருப்பதால், இத்தலம் நடுப்பழனி என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படுகிறது. சென்னையில் வட பழனி திருக்கோவிலும், தெற்கில் பழனி திருக்கோவிலும் உள்ளதால், இக்கோவில் நடுபழனி தண்டாயுதபாணி கோவில் என்றழைக்கின்றார்கள். இங்கே மலேசியாவில் பத்துமலை

கோவில் 447 - காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டு கந்தசுவாமி கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-447 சுகப்பிரசவம் அருளும் காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டு கந்தசுவாமி கோவில் 29.8.2022 திங்கள் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் நெற்குணப்பட்டு-603305 செய்யூர் தாலூகா காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பிடம்: மதுராந்தகம் 30 கிமீ, கல்பாக்கம் 12 கிமீ, மகாபலிபுரம் 27 கிமீ, கூவத்தூர் 3.5 கிமீ மூலவர்: கந்தசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தீர்த்தம்: சங்கு தீர்த்தம் பழமை: 1000 ஆண்டுகள் செல்: ஆலய அர்ச்சகர் ஜம்பு குருக்கள் 9943652273, 9786058325. தலமகிமை: சென்னை-மகாபலிபுரம்-பாண்டி ECR சாலையில் கூவத்தூரில் இறங்க வேண்டும். அடுத்துள்ள பெரிய பாலாறு பாலம் முடிந்து, வலதுபுறம் மதுராந்தகம் செல்லும் சாலையில் 2 கிமீ சென்றால் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற நெற்குணப்பட்டு கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்தலத்தில் முருகப்பெருமான், கந்தசுவாமி என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியருள்கின்றார். இத்திருக்கோவிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. ஆலய திருக்குளம் சங்கு தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தை சாப்பிட்டால் சுகப்பிரசவம் நடக்கும் என நம்பிக்கை. இவ்வூருக்கு அருகிலேயே அவ்வ

கோவில் 81 - செங்கோட்டு வேலன் குடிக்கொண்டுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-81 சேவற்கொடிக்கு பதில் சேவலையே கையில் கொண்டு அருளும் செங்கோட்டு வேலன் குடிக்கொண்டுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் 28.8.2021 சனி அருள்மிகு செங்கோட்டு வேலன் ஆலயம் அ/மி அர்த்தநாரிஸ்வரர் திருக்கோவில் திருச்செங்கோடு-637211 நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: ஈரோடு 19 கிமீ, நாமக்கல் 31 கிமீ மூலவர்: அர்த்தநாரிஸ்வரர் (சிவன் இடபாகம் சக்தி) தாயார்: பாகம்பிரியாள் (பார்வதி தேவி) நாயகன்: செங்கோட்டு வேலன் (முருகன்) தல விருட்சம்: இலுப்பை மரம் தீர்த்தம்: தேவ தீர்த்தம் புராணப்பெயர்: திருக்கொடிமாடச் செங்குன்றூர் பாடல்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், இளங்கோ அடிகள் தலமகிமை: நாமக்கல் மாவட்டத்தில் 31 கிமீ தொலைவில் உள்ள திருச்செங்கோடு குன்றில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆணும், பெண்ணும் சமம் என்ற நோக்கில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு தன் இடப்பாகத்தையே அளித்து மாதொருபாகனாகவும், முருகப்பெருமான் சேவலை கையில் பிடித்து செங்கோட்டு வேலனாகவும் பக்தர்களுக்கு அருள்புரியும் சிறப்பு தலம் இது. கோவிலுக்குச் செல்ல மலை மீது 1200 படிகள் ஏற வேண்டும். இந்

கோவில் 446 - சென்னை சேலையூர் முருகன் கோவில்

🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-446 சிக்கல்களை தீர்த்தருளும் சென்னை சேலையூர் முருகன் கோவில் 28.8.2022 ஞாயிறு அருள்மிகு முருகன் திருக்கோவில் அவ்வை நகர், பர்மா காலணி சேலையூர் சென்னை-600073 செங்கல்பட்டு மாவட்டம் இருப்பிடம்: தாம்பரம் 6 கிமீ, சென்னை சென்ட்ரல் 30 கிமீ செல்: 99400 96637 மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சென்னை கிழக்கு தாம்பரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் சேலையூரில் உள்ள பர்மா காலனி, அவ்வை நகரில் சிறப்பு மிக்க வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முப்பதாண்டுகள் பழமையானது. கந்த ஷஷ்டி விழா 7 நாட்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது இந்த நாட்களில் முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு ஹோமம், அலங்காரம், அபிஷேகம் நடைபெறும் ஆறாம் நாள் சுப்பிரமணிய சுவாமி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும். மறுநாள் 21 வகையான சிறப்பு அபிஷேகம் முடிந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கும். 7-வது ஆண்டாக வரும் கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ளது. தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு ஒவ்வொரு பிரதோஷத்தின் ப