கோவில் 446 - சென்னை சேலையூர் முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-446
சிக்கல்களை தீர்த்தருளும் சென்னை சேலையூர் முருகன் கோவில்
28.8.2022 ஞாயிறு
அருள்மிகு முருகன் திருக்கோவில்
அவ்வை நகர், பர்மா காலணி
சேலையூர்
சென்னை-600073
செங்கல்பட்டு மாவட்டம்
இருப்பிடம்: தாம்பரம் 6 கிமீ, சென்னை சென்ட்ரல் 30 கிமீ
செல்: 99400 96637
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
சென்னை கிழக்கு தாம்பரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் சேலையூரில் உள்ள பர்மா காலனி, அவ்வை நகரில் சிறப்பு மிக்க வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முப்பதாண்டுகள் பழமையானது.
கந்த ஷஷ்டி விழா 7 நாட்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது இந்த நாட்களில் முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு ஹோமம், அலங்காரம், அபிஷேகம் நடைபெறும் ஆறாம் நாள் சுப்பிரமணிய சுவாமி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறும். மறுநாள் 21 வகையான சிறப்பு அபிஷேகம் முடிந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கும். 7-வது ஆண்டாக வரும் கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ளது. தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானுக்கு ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அஷ்டமியன்று, சிவ கால பைரவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அமாவாசையின் போது, ஆதியானந்த பிரபுவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் நவராத்திரிக்கு, 9 நாட்களிலும், அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது சனி மற்றும் குரு பெயர்ச்சியின் போது பரிகார பூஜையும் நடைபெறுகிறது
தல வரலாறு:
50 ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவைச் சேர்ந்தவர்கள் இங்கு குடியேறியதால் பர்மா காலனி என்றும் அழைக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக அவ்வை நகர் உருவாக்கப்பட்டது. அவ்வை நகர் முருக பக்தர்கள் முருகப்பெருமானுக்கு ஒரு கோவில் எழுப்ப எண்ணினார்கள். பக்தர்கள். புரவலர்கள் உதவியுடன், கோவில் Late திரு கிருஷ்ணர் என்ற தீவிர பக்தரின் தலைமையில் பொருளுதவி பெறப்பட்டு, கோவில் கட்டப்பட்டது. முதல் கும்பாபிஷேகம் 2013-ல் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது பின்னர் பக்தர்கள் ராஜகோபுரம் கட்ட முடிவு செய்ததோடு, கோவிலில் உள்ள மற்ற கடவுள்களுக்கும் சந்நிதிகள் கட்டினர் எனவே, 24.2.2019-ல் இரண்டாம் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தல அமைப்பு:
கோவில் கருவறையில் 2½ அடி உயர முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருத்தணி முருகனுக்கு அடுத்தபடியாக இந்த சிலை மிக உயரமானது என்று கூறப்படுகிறது. கருவறையின் இருபுறமும் மங்கள விநாயகர் மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன இடதுபுறம் தட்சிணாமூர்த்தியும், வலதுபுறம் துர்க்கை அம்மனும் உள்ளனர். இக்கோவிலில் இப்போது சிவன் சந்நிதி உள்ளது, இறைவனுக்கு வாழக்கருத்தி ஈஸ்வரர் என்ற பெயர் உள்ளது.
சிவன் சந்நிதியின் இடதுபுறத்தில் மரகதாம்பிகை தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். வலதுபுறம், ஆதியானந்த பிரபுவின் சிலை உள்ளது, இச்சிலை முன்பக்கம் ஆஞ்சநேயரும், மறுபுறம் விநாயகரும் இணைந்திருக்கிறது அதற்கு அருகில் வடக்கு நோக்கி ராகு, கேது சிலைகள், நவக்கிரகங்கள், சிவகால பைரவர் சந்நிதியும் உள்ளன.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை
பிரார்த்தனை:
சிக்கல்கள் தீர, வழக்குகளில் வெற்றியடைய, தோஷங்கள் நீங்கிட
நேர்த்திக்கடன்:
ஹோமம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 7-9 மாலை 6-8
வழக்குகள்/பிரச்னைகளில் வெற்றியடைய சென்னை சேலையூர் முருகனை எப்போதும் துதிப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment