கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1319

நல்லன அருளும் சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

17.01.2025 வெள்ளி


அருள்மிகு சின்ன பழனியாண்டவர் திருக்கோவில் [TM008010]

மல்லிகுந்தம் 636458

மேட்டூர் வட்டம்

சேலம் மாவட்டம்

இருப்பிடம் சேலம் 38 கிமீ, மேச்சேரி 8 கிமீ, மேட்டூர் 24 கிமீ, ஓமலூர் 25 கிமீ, தாரமங்கலம் 28 கிமீ


மூலவர்: சின்ன பழனியாண்டவர்


தல மகிமை:

சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவில் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் இருக்கும் மல்லிகுந்தம் கிராமத்தில் நல்லன அருளும் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. மேலும் மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சின்ன பழனியாண்டவர் அருளாட்சி புரிகின்றார்.


மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவிலில் பங்குனி உத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பங்குனி உத்திரம் திருநாளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும் கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வரும் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில் மிகவும் பழமையான கருதப்படுகிறது.


தல அமைப்பு:

இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சின்ன பழனியாண்டவர் பழனி முருகனை போலவே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், உற்சவ மூர்த்திகள், சிவபெருமான், அம்பாள், இடும்பன் உள்ளிட்ட அனைத்து தெய்வகளும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

நல்லன நடைபெற, வேண்டியது நிறைவேற, வினைகள் அகல, பிணிகள் நீங்க, குடும்ப வாழ்வு சிறக்க, தொழில் மேம்பட, சஞ்சலங்கள் தீர


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


வேண்டியது நிறைவேற அருளும் சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவரை மனக்கண்ணால் பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1319 நல்லன அருளும் சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்


படம் 2 - 1319 வேண்டியது நிறைவேற அருளும் சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்