கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1102

தீமைகளை அகற்றும் திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்

14.6.2024 வெள்ளி


அருள்மிகு சின்ன பழனி முருகன் திருக்கோவில்

சென்னக்கல் குன்றம்

பாரதி நகர்

மணப்பாறை-621306

திருச்சி மாவட்டம்

இருப்பிடம்: மணப்பாறை 2 கிமீ, திருச்சி 39 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர்லிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள பாரதி நகரில் இருக்கும் சென்னக்கல் குன்றம் என்ற சிறிய குன்றில் தீமைகளை அகற்றும் சின்ன பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் முருகப்பெருமான் பழனி முருகனைப் போலவே சாநித்யம் மிக்கவராக அருள்வதால் இவரை சின்ன பழனி முருகன் என்று சிறப்புப் பெயரில் பக்தர்கள் அழைக்கின்றனர், திருச்சி மாநகரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ பிரயாணம் செய்தால் மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவிலை அடையலாம்.

மே 2024-ல் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டலாபிஷேக பூஜைகள் (48 நாட்கள்) தினமும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. முருகப்பெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் கொண்டாடப்பட உள்ளன.


தல வரலாறு:

புதியதாக கட்டப்பட்ட இந்த சிறிய முருகன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் மே 2024-ல் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

குன்றின் அடிவாரத்தில் விநாயகர் தனிக் கோவிலில் இருபுறமும் நாகர்கள் சூழ வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். படிக்கட்டுகள் ஏறி கோவிலை அடைந்த உடன் மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

தீமைகள் அகல, வேண்டிய வரம் கிடைக்க, துன்பங்கள் நீங்க, தொழில் சிறக்க, பிணிகள் தீர, நல்லன நடக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 6.30-12.30 மாலை 4-7


வேண்டிய வரம் தந்தருளும் திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகனை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1102 தீமைகளை அகற்றும் திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன்


படம் 2 - 1102 வேண்டிய வரம் தந்தருளும் திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்







Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்