கோவில் 937 - தஞ்சாவூர் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் ஆறுமுகம்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-937 [திருப்புகழ் தலம்] பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தஞ்சாவூர் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் ஆறுமுகம் 1.1.2024 திங்கள் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில் [TM018015] திருப்புகழ் தலம் திருவிடைமருதூர்-612104 தஞ்சாவூர் மாவட்டம் இருப்பிடம்: கும்பகோணம் 9 கிமீ மூலவர்: மகாலிங்க சுவாமி, மகாலிங்கேஸ்வரர் அம்மன்: பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை திருப்புகழ் நாயகர்: ஆறுமுகம் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: மருதமரம் தீர்த்தம்: காருண்யாமிர்த தீர்த்தம், காவிரி புராணப்பெயர்: மத்தியார்ஜுனம், திருஇடைமருதூர் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் (5), திருநாவுக்கரசர் (5), சம்பந்தர் (1), அருணகிரிநாதர் (4), கருவூர் தேவர் (திருவிசைப்பா), பட்டினத்தார் தல மகிமை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ள திருவிடைமருதூரில் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சம்பந்தர் மூவராலும் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 30-வது தலமாகும்.