கோவில் 784 - ஈரோடு எலத்தூர் நாகமலை முருகன் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-784 சந்தான பாக்கியமளிக்கும் ஈரோடு எலத்தூர் நாகமலை முருகன் கோவில் 1.8.2023 செவ்வாய் அருள்மிகு நாகமலை முருகன் திருக்கோவில் நம்பியூர் சாலை எலத்தூர்-638454 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: ஈரோடு 58 கிமீ, நம்பியூர் 7 கிமீ மூலவர்: நாகமலை முருகன் பழமை: 400 வருடங்கள் தலமகிமை: ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரிலிருந்து 58 கிமீ தொலைவில் நம்பியூர் சாலையில் அமைந்துள்ள எலத்தூர் கிராமத்தில் உள்ள குன்று ஒன்றில் மிகவும் சக்தி வாய்ந்த நாகமலை முருகன் கோவில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடுவோருக்கு எல்லா நலன்களும் கிடைக்கின்றன என்பது நம்பிக்கை. கோவிலுக்கு மலையறும் வழியில் வற்றாத சுனை இருப்பது சிறப்பம்சமாகும். நீரின் நடுவில் வேல் ஒன்று நடப்பட்டுள்ளது. இந்த சுனை நீர் முருகப்பெருமான் அபிஷேகத்திற்கும், கோவிலின் பிற பயன்பாட்டிற்கும் பயன்படுகின்றது. இக்கோவிலில் தைப்பூசம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது.