கோவில் 782 - சென்னை அயனாவரம் குழந்தை வேலர் அருள் முருகன் கோவில்

🙏🏻🙏🏻                                                                                                                                                     தினம் ஒரு முருகன் ஆலயம்-782

வல்வினைகள் போக்கும் சென்னை அயனாவரம் குழந்தை வேலர் அருள் முருகன் கோவில்

30.7.2023 ஞாயிறு


அருள்மிகு குழந்தை வேலர் அருள் முருகன் திருக்கோவில்

பெரியார் சாலை TNHB

United India Nagar

அயனாவரம்

சென்னை 600023

இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 7.5 கிமீ, கோயம்பேடு 8 கிமீ


மூலவர்: குழந்தை வேலர் அருள் முருகன்


தலமகிமை:

சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரலில் இருந்து 7.5 கிமீ தொலைவிலும், கோயம்பேட்டில் இருந்து 8 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள அயனாவரம் United India Nagar பகுதியில் உள்ள பெரியார் சாலையில் வல்வினைகள் போக்கும் சென்னை அயனாவரம் குழந்தைவேலர் அருள் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூலவர் குழந்தை வேலர் அருள் முருகன் குழந்தை வடிவில் காட்சி தந்து அருள்புரிகின்றார். குழந்தை வேலர் அருள் முருகன் ராஜ அலங்காரத்தில் எழில்மிகு தோற்றத்துடன் அருள்வது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.


இத்திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. இத்திருவிழா அனைத்து வகை அபிஷேகம், அலங்காரம், பூஜைகளுடன் நடைபெறும் இவ்விழாவிற்கு வருகை தரும் ஏராளமான முருக பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடி சுமந்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பங்குனி உத்திரம் திருநாள், கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடந்து சுவாமி வீதி உலா வருகின்றார். சஷ்டி திருநாட்களிலும் சிறப்பு பூஜைகள் உண்டு.

தல வரலாறு:

திரு கோபாலன் என்ற முருக பக்தர் உள்ளூர் முருக பக்தர்களுடன் இணைந்து இத்திருகோவிலை கட்டினார்.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், குழந்தை வேலர் அருள் முருகன் என்ற் திருப்பெயருடன் திருக்காட்சி தந்து பக்த கோடிகளுக்கு அருள்பாலிக்கின்றார்.. மேலும் உப தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

வல்வினைகள் நீங்க, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, வாழ்வில் வெற்றி உண்டாக, நல்லன நடக்க, நோய்கள் அகல்


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அலகு குத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


வாழ்வில் வெற்றி உண்டாக்கும் சென்னை அயனாவரம் குழந்தை வேலர் அருள் முருகனை போற்றி புகழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻 


படம் 1 - 782 வல்வினைகள் போக்கும் சென்னை அயனாவரம் குழந்தை வேலர் அருள் முருகன்

படம் 2 - 782 வாழ்வில் வெற்றி உண்டாக்கும் சென்னை அயனாவரம் குழந்தை வேலர் அருள் முருகன் ராஜ அலங்காரத்தில்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்