கோவில் 1848 - கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1848 விருப்பங்களை நிறைவேற்றும் கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் கோவில் 30.06.2026 செவ்வாய் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் [அ/மி விநாயகர், பாலமுருகன் திருக்கோவில்] முட்டியம் 606205 திருக்கோவிலூர் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 33 கிமீ, ரிஷிவந்தியம் 8 கிமீ, தியாகதுருகம் 17 கிமீ, திருக்கோவிலூர் 24 கிமீ, உளுந்தூர்பேட்டை 38 கிமீ, திருவண்ணாமலை 52 கிமீ மூலவர்: பாலமுருகன் உற்சவர்: பாலமுருகன் தல மகிமை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் முட்டியம் கிராமத்தில் விருப்பங்களை நிறைவேற்றும் கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் விநாயகப் பெருமானும் மற்றொரு மூலவ மூர்த்தியாக இருப்பதால், இத்திருக்கோவில் அ/மி விநாயகர், பாலமுருகன் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது...