கோவில் 1845 - கள்ளக்குறிச்சி ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1845
ஐயங்கள் தீர்க்கும் கள்ளக்குறிச்சி ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
27.06.2026 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023121]
ஐதராபாக்கம் 605803 [Aytharaapakkam]
[ஆயத்தாரப்பாக்கம்]
திருக்கோவிலூர் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 54 கிமீ, திருக்கோவிலூர் 6 கிமீ, ரிஷிவந்தியம் 26 கிமீ, தியாகதுருகம் 35 கிமீ, திருவண்ணாமலை 44 கிமீ, உளுந்தூர்பேட்டை 46 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் ஐதராபாக்கம் கிராமத்தில் ஐயங்கள் தீர்க்கும் கள்ளக்குறிச்சி ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் திருப்பணி வேலைகள் 2024-ல் முடிவு பெற்று 11.02.2024 அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 55 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிகின்றார்.
கள்ளக்குறிச்சி ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி முக்கியத் திருவிழாக்களாக சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமியின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகப் பழமையான திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் நிர்வாகம் தற்போது இந்து அறநிலயத் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகப் பணிகள் 2024-ல் முடிவுற்று 11.02.2024 அன்று மிகச் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வாசலில் கொடிமரம், வேல்கள் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், சக்தி விநாயகர், அம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
ஐயங்கள் தீர, மன மகிழ்ச்சி உண்டாக, வேண்டும் வரங்கள் வழங்க, வல்வினைகள் போக்க, சகல பிணிகள் அகல, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் சீரடைய, கவலைகள் விலக, தோஷங்களை விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன மகிழ்ச்சி தந்தருளும் கள்ளக்குறிச்சி ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி தாள் பணிந்து தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1845 ஐயங்கள் தீர்க்கும் கள்ளக்குறிச்சி ஐதராபாக்கம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment