Posts

Showing posts from September, 2022

கோவில் 114 - ஈரோடு மாவட்டம் ஆண்டவர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-114 ஆன்றோரும் சான்றோரும் வழிபடும் ஈரோடு மாவட்டம் ஆண்டவர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் 30.9.21 வியாழன் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆண்டவர்மலை கோபிசெட்டிபாளையம்-638452 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: கோபியிலிருந்து 3 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி பழமை: 500 வருடங்கள் முன்பு தல மகிமை: குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் ஈரோடு மாவட்டம் கோபியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும் (2.7.21 பதிவு), பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும் (29.9.21 பதிவு), ஆண்டவர்மலை குன்றில் பாலதண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கி அருள்பொழிந்து வருகிறார். சிவபெருமானின் ஐந்து முகச்சுடரும், நெற்

கோவில் 479 - கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-479 வள்ளலார் சுவாமிகளால் 'சிங்கபுரி கந்தர் பதிகம்' பாடப்பெற்ற கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி கோவில் 30.9.2022 வெள்ளி அருள்மிகு சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [சுப்புராய சுவாமி திருக்கோவில்] விழப்பள்ளம் குறிஞ்சிப்பாடி-607302 கடலூர் மாவட்டம் இருப்பிடம்: கடலூர் 31 கிமீ, வடலூர் 6 கிமீ, சிதம்பரம் 27 கிமீ தொலைப்பேசி: 04142 258403 மூலவர்: சுப்பிரமணிய சுவாமி உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் பாடியவர்: வள்ளலார் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் தலமகிமை: வடலூர்-கடலூர் சாலையில் வடலூரிலிருந்து 6-வது கிமீ-ல் வள்ளலார் சுவாமிகளால் 'சிங்கபுரி கந்தர் பதிகம்' பாடப்பெற்ற குறிஞ்சிப்பாடி சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. விழப்பள்ளம் செங்குந்தர் பெருமக்களுக்கு சொந்தமான இக்கோவில் சுப்புராய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. வள்ளல் பெருமான்: கந்தக்கோட்டம் குமரப்பெருமான், திருவொற்றியூர் வடிவுடையம்மை உட்பட பல்வேறு தலங்களை பாடியருளியவரும், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவியவருமான வள்ளல்

கோவில் 113 - ஈரோடு மாவட்டம் பவளமலை முத்துக்குமார சுவாமி கோவில்

Image
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-113 நம் பாவங்களை போக்கிடும் ஈரோடு மாவட்டம் பவளமலை முத்துக்குமார சுவாமி கோவில் 29.9.21 புதன் அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் பவளமலை, முருகன்புதுர்-638476 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: கோபி 3 கிமீ, ஈரோடு 38 கிமீ மூலவர்: முத்துக்குமார சுவாமி தேவியர்: வள்ளி. தெய்வானை தல மகிமை: குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை

கோவில் 478 - தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சாலிக்குளம் புற்று முருகன் கோவில்

Image
🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-478 பிணி தீர்க்க அருளும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சாலிக்குளம் புற்று முருகன் கோவில் 29.9.2022 வியாழன் அருள்மிகு புற்று முருகன் திருக்கோவில் [புற்று முருகன் சித்தர்பீடம்] கோவில்பட்டி சாலை சாலிக்குளம் ஓட்டப்பிடாரம்--628401 தூத்துக்குடி மாவட்டம் இருப்பிடம்: ஓட்டப்பிடாரம் 3 கிமீ செல்: 9972374078 மூலவர்: புற்று முருகன் (புற்று மண்) தல விருட்சம்: வேலமரம் தீர்த்தம்: நாகசுனை தீர்த்தம் பழமை: 50 ஆண்டுகள் தலமகிமை: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்-கோவில்பட்டி சாலையில் 3 கிமீ தொலைவில் சாலிக்குளம் புற்று முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் புற்று முருகன் சித்தர்பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக முருகப்பெருமானே விளங்குகிறார். “புற்றிருக்க பிணியில்லை” என்ற புது மொழியுடன் பக்தர்கள் பிணிகளை, முருகப்பெருமான் குணமாக்குகிறார். முத்துச்சாமி என்ற தீவிர முருக பக்தரின் வயிற்று வலியை வயோதிகர் வடிவில் முருகப்பெருமான் வந்து புற்று மண் கொடுத்து தீர்த்து வைத்ததால் இன்றும் புற்று மண்ணே நோய் தீர்க்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. முரு

கோவில் 112 - தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்

Image
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-112 கேட்ட வரம் தந்தளுரும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் 28.9.21 செவ்வாய் அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவில் கழுகுமலை-628552 தூத்துக்குடி மாவட்டம் இருப்பிடம்: கோவில்பட்டி 22 கிமீ, சங்கரன்கோவில் 21 கிமீ, திருநெல்வேலி 59 கிமீ மூலவர்: கழுகாசலமூர்த்தி (முருகப்பெருமான்) தாயார்: வள்ளி, தெய்வானை தலவிருட்சம்: மலைக்குன்று தீர்த்தம்: குமார தெப்பம் பழமை: 7-ம் நூற்றாண்டு அதிசய நிறைந்த குடவரை கோவில் பதிகம்: அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், சங்கீத மும்மூர்த்தி களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், மகாகவி பாரதியார், ‘காவடிச்சிந்து’ பாடிய புலவர் அண்ணாமலை ரெட்டியார், கழுகுமலை பிள்ளைத்தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயர் ஆகியோர் இத்தலத்தில் பாடல்கள் பாடியுள்ளனர். 1.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (634) “வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே” 2.பாம்பன் சுவாம

கோவில் 477 - திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளேரி ராஜகிரி வெற்றிவேல் முருகன் கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-477 நல்லதையே அருளும் திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளேரி ராஜகிரி வெற்றிவேல் முருகன் கோவில் 28.9.22 புதன் அருள்மிகு ராஜகிரி வெற்றிவேல் முருகன் திருக்கோவில் வெள்ளேரி-632317 ஆரணி வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: ஆரணி 10 கிமீ, ஆற்காடு 20 கிமீ மூலவர்: வெற்றிவேல் முருகன் தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து ஆரணி-ஆற்காடு சாலையில் 10-வ்து கிமீ-ல் வெள்ளேரி என்ற கிராமத்தில் உள்ள சிறிய குன்றில் ராஜகிரி வெற்றிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆடிக்கிருத்திகை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது. மாதாந்திரக் கிருத்திகை நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ந்டைபெறுகின்றன. தல வரலாறு: 70 வருடங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் வாழ்ந்த கன்னியப்ப சுவாமிகள் என்ற மகான் கனவில் முருகப்பெருமான் தோன்றி இந்தக் குன்றின் மீது தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கூறினார். கன்னியப்ப

கோவில் 111 - முருகன் திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-111 மனநிலை பாதிக்கப்பட்டோரை குணமாக்கும் முருகன் திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் 27.9.21 திங்கள் அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோவில் திருமுருகன்பூண்டி-641652 திருப்பூர் மாவட்டம் இருப்பிடம்: திருப்பூர் 9 கிமீ, அவிநாசி 13 கிமீ, கோவை 48 கிமீ மூலவர்: திருமுருகநாதர், முருகநாதேஸ்வரர் அம்பாள்: ஆவுடைநாயகி, மங்களாம்பிகை, ஆலிங்க பூஷண ஸ்தனாம்பிகை நாயகர்: முருகப்பெருமான் தலவிருட்சம்: வில்வம், குருக்கத்தி தீர்த்தம்: சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்மதீர்த்தம் பதிகம்: 1. சுந்தரர் அருளிய தேவாரம் (206-வது தலம்):`வேதம் ஓதி வெண்ணீறு` 2. அருணகிரிநாதர் திருப்புகழ்: `திருமுருகன்பூண்டிப்பெருமாளே. ... திருமுருகன்பூண்டி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே`3.செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் அருளிய தலபுராணம்-திருமுருகன்பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தன் என்று பாடப்பட்ட தலம்

கோவில் 476 - நாமக்கல் மாவட்டம் அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏 🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-476 செவ்வாய்க்கிழமை செவ்வேளின் பிணி தீர்க்கும் நாமக்கல் மாவட்டம் அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 27.9.22 செவ்வாய் அருள்மிகு அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் படமுடிப்பாளையம் பரமத்தி வேலூர் (ப.வேலூர்)-638182 நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: நாமக்கல் 22 கிமீ, பரமத்தி வேலூர் 7 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தாயார்: வள்ளி, தெய்வானை பழைமை: பல நூறு வருடங்கள் தல மகிமை: நாமக்கல் மாவட்டம் ப. வேலூரிலிருந்து 7 கிமீ தொலைவிலுள்ள படமுடிப்பாளையம் எனும் ஊரில் அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமான் கோவில் சிறிய கோவிலாக இருந்தாலுன், இதன் கீர்த்தி பெரியது. இந்த பழமையான கோவிலில் முருகன் தனது தேவியருடன் அருளுகிறார். இத்திருத்தலத்தில் முருகப்பெருமானது அனைத்து விசேஷங்க்ளும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. தல வரலாறு: இந்தக் கோவிலில் உள்ள முருகப்பெருமான் கையில் வேல