கோவில் 114 - ஈரோடு மாவட்டம் ஆண்டவர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-114

ஆன்றோரும் சான்றோரும் வழிபடும் ஈரோடு மாவட்டம் ஆண்டவர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

30.9.21 வியாழன்


அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

ஆண்டவர்மலை

கோபிசெட்டிபாளையம்-638452

ஈரோடு மாவட்டம்

இருப்பிடம்: கோபியிலிருந்து 3 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி

பழமை: 500 வருடங்கள் முன்பு

தல மகிமை:

குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் ஈரோடு மாவட்டம் கோபியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும் (2.7.21 பதிவு), பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும் (29.9.21 பதிவு), ஆண்டவர்மலை குன்றில் பாலதண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கி அருள்பொழிந்து வருகிறார்.


சிவபெருமானின் ஐந்து முகச்சுடரும், நெற்றிக்கண்ணின் சுடரும் சேர்ந்து ஆறுபொறிகளால் உதித்தவர் ஆறுமுகப்பெருமான். சமயங்கள் 6, கோஷங்கள் 6, ஆதார கமலங்கள் 6, வேத இதிகாசங்கள் 6, ஞானசாதனை 6, சாஸ்திரம் 6 ஆகிய ஆறு அம்சங்களும் முருகப்பெருமானுக்கு உரியவை. இப்படிப்பட்ட கருணைக்கடலாக விளங்கும் முருகப்பெருமான் ஆண்டவர்மலையில் நின்ற கோலத்தில் இருக்கும் பாலதண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க இருக்கிறோம்.. ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புதத்தலம்.


முருகப்பெருமான் விரும்பி குடியேறியத் தலம். இங்கும் முருகன் பழனியைப் போல மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். மனமுருகி வேண்டுவோருக்கு மூன்று கிருத்திகைக்குள் திருமண வரமருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தில் நடைபெறும் பார்வதி சுயம்வரம் சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.


தல வரலாறு:

ஆண்டவர்மலை முருகன் கோவில் பழமை வாய்ந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்குன்றில் குடிகொண்ட முருகப்பெருமானைப் போற்றி வணங்கி பூசாரி சித்தர் என்பவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுத்து வந்தார். பின் குப்பணசித்தர் என்பவர் காற்று ஆதாரத்துடன் பல காலங்கள் அருள்பாலித்து வந்தார் என்பது வரலாறு..

தல அமைப்பு:

கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி இரண்டடி உயரத்தில் வலது கையில் தண்டம் ஊன்றி, இடது கையை இடுப்பில் வைத்து நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூர்த்தி சிறிதென்றாலும், கீர்த்தி பெரிது. தினமும் 3 கால பூஜைகள் சுவாமிக்கு நடைபெறுகிறது. விநாயகர், சிவபெருமான், பார்வதி, வள்ளி, தெய்வானை, ஏகபாதமூர்த்தி, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தி, தெய்வநாயகி, காலபைரவர், நவக்கிரகம் ஆகிய மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்


திருவிழா:

தைப்பூசம், பங்குனி, உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

வேண்டிய வரம் கிடைக்க, நோய்கள், பாவங்கள் நீங்க, திருமண வரம் அருள


நேர்த்திக்கடன்:

திருமுழுக்காட்டு,, அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 4-8


வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் ஆண்டவர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமியை துதித்துப் போற்றுவோம்!


.வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



Comments

  1. Andavarmalai Balathandayuthapani swamiku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்