Posts

Showing posts from March, 2024

கோவில் 1028 - திருப்பத்தூர் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1028 கேட்ட வரம் அருளும் திருப்பத்தூர் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 1.4.2024 திங்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கிருஷ்ணாபுரம் ஆம்பூர்-635802 திருப்பத்தூர் மாவட்டம் இருப்பிடம்: ஆம்பூர் பேருந்து நிலையம் 1.5 கிமீ, வாணியம்பாடி 17 கிமீ, வேலூர் 55 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நகரம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் கேட்ட வரம் அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. வாணியம்பாடியிலிருந்து 17 கிமீ அல்லது வேலூர் 55 கிமீ பிரயாணம் செய்தாலும் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இங்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிப்பது சிறப்பு. இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடிக்கிருத்திகை முதலான திருவிழாக்கள் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றன. தல வரலாறு: உள்ளூரில் பிரசித்தி பெற்ற கோவிலாகக் கருதப்படுகிறது. தல அமைப்பு: திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி, வள்ளி,

கோவில் 1027 - திருவாரூர் பரவாக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1027 குழந்தை வரம் தந்தருளும் திருவாரூர் பரவாக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் 31.3.2024 ஞாயிறு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வடக்கு தெரு பரவாக்கோட்டை-614015 மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம் இருப்பிடம்: மன்னார்குடி 12 கிமீ செல்: திரு G. சுதாகர் 77086 72991 மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மன்னார்குடியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பரவாக்கோட்டை கிராமம் வடக்கு தெருவில் குழந்தை வரம் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்கின்றார். மார்கழி மாதம் சூரிய ஒளி மூலவர் மீது ஒளிர்வது இக்கோவிலின் சிறப்பு நிகழ்வு. இக்கோவிலில் சிவசக்தி ஆதிக்கம் இருப்பது சிறப்பம்சம். இக்கோவில் வளாகத்தில் மகா வில்வ மரம், மூன்று முக ருத்ராட்சர மரம், கல்லால மரம், கடம்ப மரம் போன்ற பல ஆன்மீக மரங்கள் இருப்பது பக்தர்களுக்கு நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா

கோவில் 1026 - விழுப்புரம் செஞ்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1026 நன்மைகளை அள்ளித் தரும் விழுப்புரம் செஞ்சி சுப்பிரமணிய சுவாமி கோவில் 30.3.2024 சனி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM011939] B. ஏரிக்கரை செஞ்சி-604202 விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: விழுப்புரம் 39 கிமீ, திண்டிவனம் 32 கிமீ, செஞ்சி பேருந்து நிலையம் 1 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி (சுப்பிரமணியர்) தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாநகரிலிருந்து 39 கிமீ தொலைவிலும், திண்டிவனம் நகரிலிருந்து 32 கிமீ தொலைவிலும் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான செஞ்சி கோட்டைக்கருகில் B. ஏரிக்கரையில் உள்ள நன்மைகளை அள்ளித் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். 50 ஆண்டுகளாக ஆடிக்கிருத்திகை திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் 10 நாள் பெருவிழாவில் தினமும் காலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு ப

கோவில் 1025 - ஈரோடு காசிபாளையம் பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1025 இடர்கள் களையும் ஈரோடு காசிபாளையம் பாலமுருகன் கோவில் 29.3.2024 வெள்ளி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் [TM011939] காசிபாளையம் ஈரோடு-638003 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: ஈரோடு பேருந்து நிலையம்/ரயில் நிலையம் 5/3 கிமீ மூலவர்: பாலமுருகன் உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சிறப்பு தெய்வம்: 36 அடி முருகன் தல மகிமை: ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தூரத்திலும் மற்றும் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும் உள்ள காசிபாளையம் பகுதியில் இடர்கள் களையும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. ஈரோடு மாநகரில் அமைந்துள்ள இக்கோவிலில் முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கந்த சஷ்டி முக்கிய திருவிழா ஆகும். முருகன் பாலமுருகனாக அருள்வதால், கந்த சஷ்டி திருவிழாவில் 6-ம் நாள் சூரசமஹாரம் கிடையாது. பாலாபிஷேகமும், திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் உண்டு. இக்கோவிலில் சிறப்பாக வீற்றிருக்கின்ற 36 அடி உயர முருகனை 36 முறை சுற்றி வந்து வேண்டி கொள்வோரின் எவ்வித வேண்டுதலையும் முருகன் நிறைவேற்றுவார் என்பது இங்குள்

கோவில் 1024 - திண்டுக்கல் S தும்மலபட்டி பாலசுப்பிரமணியர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1024 தோல் நோய்களை தீர்க்கும் திண்டுக்கல் S தும்மலபட்டி பாலசுப்பிரமணியர் கோவில் 28.3.2024 வியாழன் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் [TM016524] [S. தும்மலபட்டி-624211 [தும்மலபட்டி] நிலக்கோட்டை வட்டம் திண்டுக்கல் மாவட்டம் இருப்பிடம்: நிலக்கோட்டை 8 கிமீ, திண்டுக்கல் 30 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் நிலக்கோட்டையிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் தும்மலபட்டி கிராமத்தில் பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாநகரிலிருந்து 30 கிமீ பிரயாணம் செய்தால், தும்மலபட்டி பாலசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். பழனி கோவில் முருகனுக்கு நிகரானவர் இந்த பாலசுப்பிரமணியர் என்று பக்தர்கள் கூறுகின்றனர். மிகவும் சக்தி நிறைந்த பாலசுப்பிரமணியரை வழிபட்டு கோவில் தீர்த்தம் தடவினால் தோல் அலர்ஜி, சரும பிரச்சன

கோவில் 1023 - திருவாரூர் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1023 எண்ணியதை ஈடேற்றும் திருவாரூர் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் 27.3.2024 புதன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM016524] லட்சுமாங்குடி-614102 [லஷ்மாங்குடி/லெட்சுமாங்குடி] திருவாரூர் மாவட்டம் இருப்பிடம்: திருவாரூர் 17 கிமீ, மன்னார்குடி 12 கிமீ, கூத்தாநல்லூர் 1.5 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கோவில் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் இருக்கும் லட்சுமாங்குடி என்னும் ஊரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து 12 கிமீ பிரயாணம் செய்தாலும், அருகில் உள்ள கூத்தாநல்லூரிலிருந்து 1.5 கிமீ பிரயாணம் செய்தாலும் லட்சுமாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. தல வரலாறு: இந்து அறநிலையத் து

கோவில் 1022 - கடலூர் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1022 ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் கடலூர் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 26.3.2024 செவ்வாய் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வன்னியர்புரம்-607102 நடுவீரபட்டு கடலூர் மாவட்டம் இருப்பிடம்: கடலூர் 20 கிமீ, பண்ருட்டி 12 கிமீ மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: கடலூர் மாவட்டம் கடலூர் மாநகரிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் வன்னியர்புரம் பகுதியில் ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பண்ருட்டியிலிருந்து 12 கிமீ பிரயாணம் செய்தாலும் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார். முருகப்பெருமானின் திருவிழாக்கள் சிறப்பாக ந்டைபெறுகின்றன. தல வரலாறு: இக்கோவில் பழமையானதாக கருதப்படுகிறது. தல அமைப்பு: அழகிய சிற்பங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் சிவசுப்பிரமணிய சுவாமி கையில் வேலேந்தி வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் உட்பட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். திரு

கோவில் 1021 - ஈரோடு பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-1021 வாழ்வு மேம்பட அருளும் ஈரோடு பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமி கோவில் 25.3.2024 திங்கள் அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் [TM012545] பிரம்மதேசம்-638315 அந்தியூர் வட்டம் ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: ஈரோடு 33 கிமீ, பவானி 18 கிமீ, அந்தியூர் 5 கிமீ மூலவர்: முத்துக்குமார சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரிலிருந்து 33 கிமீ தொலைவில் இருக்கும் பிரம்மதேசம் என்ற கிராமத்தில் வாழ்வு மேம்பட அருளும் முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்தியூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும், பவானியிலிருந்து 18 கிமீ தொலைவிலும் இருக்கும் பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமி கோவிலில் முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார். இத்திருத்தலத்தில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை, சஷ்டி தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தல வரலாறு: பழைமையான இக்கோவில் தற்போது இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. தல அமைப்பு: இக்கோவில் கருவறையில் மூலவராக முத்துக்குமார சுவ