கோவில் 1028 - திருப்பத்தூர் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-1028

கேட்ட வரம் அருளும் திருப்பத்தூர் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

1.4.2024 திங்கள்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

கிருஷ்ணாபுரம்

ஆம்பூர்-635802

திருப்பத்தூர் மாவட்டம்

இருப்பிடம்: ஆம்பூர் பேருந்து நிலையம் 1.5 கிமீ, வாணியம்பாடி 17 கிமீ, வேலூர் 55 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நகரம் ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் கேட்ட வரம் அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. வாணியம்பாடியிலிருந்து 17 கிமீ அல்லது வேலூர் 55 கிமீ பிரயாணம் செய்தாலும் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இங்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிப்பது சிறப்பு.


இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடிக்கிருத்திகை முதலான திருவிழாக்கள் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றன.

தல வரலாறு:

உள்ளூரில் பிரசித்தி பெற்ற கோவிலாகக் கருதப்படுகிறது.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி, வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கெதிரில் மயில், பலிபீடம் மற்றும் வேல் உள்ளன. மேலும் விநாயகர், அரசமர பிள்ளையார், ஐயப்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி,


பிரார்த்தனை:

கேட்ட வரம் கிடைக்க, கல்யாண வரம் வேண்டி, வினைகள் அகல, பிணிகள் தீர, நல்லன நடைபெற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


கல்யாண வரம் அருளும் திருப்பத்தூர் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1028 கேட்ட வரம் அருளும் திருப்பத்தூர் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 1028 கல்யாண வரம் அருளும் திருப்பத்தூர் ஆம்பூர் சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்