Posts

Showing posts from May, 2024

கோவில் 1089 - சென்னை முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1089 பிணிகள் தீர்க்கும் சென்னை முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 1.6.2024 சனி அருள்மிகு அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முகலிவாக்கம் சென்னை-6000125 சென்னை மாவட்டம் இருப்பிடம்: போரூர் 5 கிமீ, கிண்டி 8 கிமீ, கோயம்பேடு 10 கிமீ, பூவிருந்தவல்லி 12 கிமீ மூலவர்: அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள கிண்டி ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் முகலிவாக்கத்தில் பிணிகள் யாவும் தீர்க்கும் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார். அருகிலிருக்கும் போரூரிலிருந்து 5 கிமீ, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ, பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலின் அ

கோவில் 1088 - சென்னை சிந்தாதிரிப்பேட்டை முருகவேல் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1088 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை முருகவேல் கோவில் 31.5.2024 வெள்ளி அருள்மிகு முருகவேல் திருக்கோவில் [TM000146] 80, அய்யா முதலி தெரு (தெற்கு) சிந்தாதிரிப்பேட்டை சென்னை-600002 சென்னை மாவட்டம் இருப்பிடம்: சென்னை எழும்பூர் 1.5 கிமீ, சென்ட்ரல் 2.5 கிமீ, கோயம்பேடு 10 கிமீ தொலைபேசி எண்: 044 43325476 மூலவர்: முருகவேல் தேவியர்: வள்ளி தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை 80, அய்யா முதலி தெருவில் சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் முருகவேல் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவாராக முருகவேல் பெருமான் வள்ளி, தெய்வானையோடு வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2.5 கிமீ, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சிந்தாதிரிப்பேட்டை முருகவேல் கோவிலை அடையலாம். இக்கோவிலின் மகா கும்பாபிஷ

கோவில் 1087 - திருவள்ளூர் பொன்னேரி சின்னகாவணம் பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1087 குழந்தை வரம் தந்தருளும் திருவள்ளூர் பொன்னேரி சின்னகாவணம் பாலமுருகன் கோவில் 30.5.2024 வியாழன் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் [TM001961] [அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்] சின்னகாவணம் பொன்னேரி-601204 திருவள்ளூர் மாவட்டம் இருப்பிடம்: பொன்னேரி 2 கிமீ, சென்னை சென்ட்ரல் 38 கிமீ, கோயம்பேடு 39 கிமீ மூலவர்: பாலமுருகன் (பாலசுப்பிரமணிய சுவாமி) உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி தெய்வானை பழமை: 600 ஆண்டுகள் தல மகிமை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகரிலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் சின்னகாவணம் கிராமத்தில் குழந்தை வரம் தந்தருளும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் 38 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும், கோயம்பேடு 39 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சின்னகாவணம் பாலமுருகன் கோவிலை அடையலாம். 600 ஆண்டுகள் பழமை மிகுந்த இக்கோவிலில் பாலமுருகன் மூலவராக காட்சி அருள்கின்றார். இவருக்கு பாலசுப்பிரமணிய சுவாமி என்ற திருப்ப

கோவில் 1086 - சென்னை சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1086 கோரிக்கைகளை நிறைவேற்றும் சென்னை சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியர் கோவில் 29.5.2024 புதன் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் குட்டியப்பன் தெரு சன்னியாசிபுரம் [சன்யாசிபுரம்/சந்நியாசிபுரம்] கீழ்பாக்கம் சென்னை-600010 இருப்பிடம்: சென்னை எழும்பூர் 4 கிமீ, கோயம்பேடு 10 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணியர் உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தோற்றம்: 1957 தல மகிமை: சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியான எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் இருக்கும் கீழ்பாக்கம் சன்னியாசிபுரம் குட்டியப்பன் தெருவில் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அழகுமிகு பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக பாலசுப்பிரமணியர் அருள்புரிகின்றார். இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. சிறப்பு

கோவில் 1085 - சென்னை புது பெருங்களத்தூர் பச்சைமலை முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1085 வாழ்வில் வளமருளும் சென்னை புது பெருங்களத்தூர் பச்சைமலை முருகன் கோவில் 28.5.2024 செவ்வாய் அருள்மிகு பச்சைமலை முருகன் திருக்கோவில் சதாநாதபுரம் (Sadhanathapuram) புது பெருங்களத்தூர் சென்னை-600063 இருப்பிடம்: தாம்பரம் 5 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியான தாம்பரம் நகரிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள புது பெருங்களத்தூர் பகுதியில் இருக்கும் சதாநாதபுரத்தில் (Sadhanathapuram) உள்ள ஒரு சிறிய மலையின் மேல் வாழ்வில் எல்லா வளங்களுமருளும் பச்சைமலை முருகன் கோவில் கோவில் உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் இருப்பது சிறப்பு. இக்கோவிலில் உள்ள சக்தி மிக்க பச்சைமலை முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியருள்கின்றார். இக்கோவிலுக்கு மலை ஏறி செல்ல (சுமார் 500 மீ) படிக்கட்டுகள் இல்லாததால், மூத்த குடிமக்கள், குழந்தைகள், உடல் நலம் சரியில்லாதவர்கள் செல்வது உசிதமல்ல. இக்கோவிலில் தைப்பூசம் திருவிழா மிகவும் விமரிச

கோவில் 1084 - திருவண்ணாமலை வந்தவாசி தென்சேந்தமங்கலம் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1084 செல்வம் பெருக அருளும் திருவண்ணாமலை வந்தவாசி தென்சேந்தமங்கலம் முருகன் கோவில் 27.5.2024 திங்கள் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் தென்சேந்தமங்கலம்-604404 (சேந்தன் குன்று} வந்தவாசி வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: வந்தவாசி 7 கிமீ, திருவண்ணாமலை 56 கிமீ, காஞ்சிபுரம் 48 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி தெய்வானை தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரிலிருந்து வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 7 கிமீ தொலைவில் இருக்கும் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சிறிய மலைக் குன்றில் செல்வம் பெருக அருளும் முருகன் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை நகரிலிருந்து 56 கிமீ தொலைவு, காஞ்சிபுரம் நகரிலிருந்து 48 கிமீ பிரயாணம் செய்தாலும் தென்சேந்தமங்கலம் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக முருகன் வள்ளி, தெய்வானையோடு அருளாட்சி செய்கின்றார். இக்கோவில் முருகப்பெருமான் வல்லக்கோட்டை முருகப்பெருமான் போல நெடிதுயர்ந்த தோற்றத்தில் மிகவும் ஆற்றலுடன் அருள்வது சிறப்பம்சமாகும

கோவில் 1083 - திருவண்ணாமலை வந்தவாசி ஆரூர் பாலமுருகன் மலைக்கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1083 கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் திருவண்ணாமலை வந்தவாசி ஆரூர் பாலமுருகன் மலைக்கோவில் 26.5.2024 ஞாயிறு அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் ஆரூர்-604408 வந்தவாசி வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: வந்தவாசி 14 கிமீ மூலவர்: பாலமுருகன் தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரிலிருந்து வந்தவாசி-தெள்ளாறு சாலையில் 14 கிமீ தொலைவில் ஆரூர் கிராமத்தில் உள்ள சிறிய மலைக் குன்றில் கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் பாலமுருகன் மலைக்கோவில் அமைந்துள்ளது. வந்தவாசி அடுத்த ஏம்பலம், நடுகுப்பம், மீசநல்லூர், மாம்பட்டு, தெள்ளார், வணக்கம்பாடி ஆகிய ஆறு கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆரூர் குமரன் குன்று பாலமுருகன் மலைக்கோவில் இருப்பது சிறப்பம்சம். இக்கோவிலில் மூலவராக பாலமுருகன் அருள்புரிகின்றார். இக்கோவிலில் தைப்பூசம் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசம் திருநாளன்று பக்தர்கள் 108 பால்குடம் ஏந்தி கோவிலுக்கு வந்து தங்கள் கைகளாலே பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்வது இக்க