கோவில் 1086 - சென்னை சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1086

கோரிக்கைகளை நிறைவேற்றும் சென்னை சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியர் கோவில்

29.5.2024 புதன்


அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

குட்டியப்பன் தெரு

சன்னியாசிபுரம்

[சன்யாசிபுரம்/சந்நியாசிபுரம்]

கீழ்பாக்கம்

சென்னை-600010

இருப்பிடம்: சென்னை எழும்பூர் 4 கிமீ, கோயம்பேடு 10 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணியர்

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி தெய்வானை

தோற்றம்: 1957


தல மகிமை:

சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியான எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் இருக்கும் கீழ்பாக்கம் சன்னியாசிபுரம் குட்டியப்பன் தெருவில் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அழகுமிகு பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக பாலசுப்பிரமணியர் அருள்புரிகின்றார்.


இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. சிறப்பு பூஜைகள் ந்டைபெறுகின்றன. பின்னர் சுவாமி-தேவியர் திருக்கல்யாணம் கோலகலமாக ந்டைபெறும். மாதக் கார்த்திகை திருநாளில் விசேஷ பூஜைகள் நடைபெற்று சுவாமி புறப்பாடு நடைபெறும். இதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெறும். முருகபெருமானின் இதர திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் இக்கோவிலில் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

சிவத்திரு எல்லப்ப செட்டியார் என்ற சிறந்த முருக பக்தரால் 1957-ம் ஆண்டு சன்னியாசிபுரம் குட்டியப்பன் தெருவில் பாலசுப்பிரமணியர் கோவிலை கட்டினார். 1995-ல் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. எல்லப்ப செட்டியாருக்கு பின் அவரது குமாரர் சிவத்திரு குணசேகரன் அவர்கள் திருக்கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்தார். தற்போது சிவத்திரு குணசேகரன் அவர்களின் குமாரர் சிவத்திரு குமார் திருக்கோவில் நிர்வாகத்தல் சிறப்புற நடத்தி வருகின்றார். சமீபத்தில் இக்கோவில் புனரமைக்கப்பட்டு, 17.3.2022 அன்று மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

சென்னை மாநகரின் மையப்பகுதியில் உள்ள இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகப்பெருமான், பாலசுப்பிரமணியர் என்ற திருப்பெயருடன் கையில் வேல் கொண்டு பொலிவுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பாலசுப்பிரமணியருக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன, கருவறைக்கு அருகில் மகா கணபதியும், அதற்கு அடுத்து அம்பாள் சமேத சர்வேஸ்வரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பது இக்கோவிலின் தனி சிறப்பு. நவகிரகங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

கோரிக்கைகளை நிறைவேற, இன்னல்கள் அகல, பிணிகள் நீங்க, வியாபாரம், தொழில் சிறக்க, நல்லன நடக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


இன்னல்களை அகற்றும் சென்னை சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியரை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1086 கோரிக்கைகளை நிறைவேற்றும் சென்னை சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியர்


படம் 2 - 1086 இன்னல்களை அகற்றும் சென்னை சன்னியாசிபுரம் பாலசுப்பிரமணியர்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்