கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1341

நற்பலன்களை நல்கும் சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

8.02.2025 சனி


அருள்மிகு பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

கே ஆர் மில் வளாகம் (K R Mill)

பள்ளப்பட்டி

சேலம் 636009

சேலம் மாவட்டம்

இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 3 கிமீ, சேலம் ரயில் நிலையம் 3 கிமீ, சேலம் பழைய பேருந்து நிலையம் 6 கிமீ, ஓமலூர் 15 கிமீ, தாரமங்கலம் 21 கிமீ மேச்சேரி 31 கிமீ

மூலவர்: பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை

தல மகிமை:

சேலம் மாநாகரத்தில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள பள்ளப்பட்டி கே ஆர் மில் வளாகத்தில் நற்பலன்களை நல்கும் சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. மேலும் சேலம் ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 31 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாநகரம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக 8 அடி உயர பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி பேராற்றலுடன் அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலுக்கு 25.01.2024 அன்று சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கார்த்திகை நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

மிகவம் பழமையாக கருதப்படும் சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று 25.01.2024 அன்று திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.

.

தல அமைப்பு:

சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையில் 8 அடி உயரமான பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவராக கம்பீரத்துடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பொங்கல், சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

நற்பலன்கள் நல்கிட, விருப்பங்கள் நிறைவேற அருளும், பிணிகள் நீங்க, வினைகள் போக்க, ஞானம் மேம்பட , ஐஸ்வர்யம் பெருக, மன மகிழ்ச்சி கிடைக்க, சந்தான பாக்கியம் கிட்ட, உடல்நலன் வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


விருப்பங்கள் நிறைவேற அருளும் சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1341 நற்பலன்களை நல்கும் சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி


படம் 2 - 1341 விருப்பங்கள் நிறைவேற அருளும் சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்