கோவில் 1083 - திருவண்ணாமலை வந்தவாசி ஆரூர் பாலமுருகன் மலைக்கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1083

கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் திருவண்ணாமலை வந்தவாசி ஆரூர் பாலமுருகன் மலைக்கோவில்

26.5.2024 ஞாயிறு


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

ஆரூர்-604408

வந்தவாசி வட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்

இருப்பிடம்: வந்தவாசி 14 கிமீ


மூலவர்: பாலமுருகன்


தல மகிமை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரிலிருந்து வந்தவாசி-தெள்ளாறு சாலையில் 14 கிமீ தொலைவில் ஆரூர் கிராமத்தில் உள்ள சிறிய மலைக் குன்றில் கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் பாலமுருகன் மலைக்கோவில் அமைந்துள்ளது. வந்தவாசி அடுத்த ஏம்பலம், நடுகுப்பம், மீசநல்லூர், மாம்பட்டு, தெள்ளார், வணக்கம்பாடி ஆகிய ஆறு கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆரூர் குமரன் குன்று பாலமுருகன் மலைக்கோவில் இருப்பது சிறப்பம்சம். இக்கோவிலில் மூலவராக பாலமுருகன் அருள்புரிகின்றார்.


இக்கோவிலில் தைப்பூசம் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. தைப்பூசம் திருநாளன்று பக்தர்கள் 108 பால்குடம் ஏந்தி கோவிலுக்கு வந்து தங்கள் கைகளாலே பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்வது இக்கோவிலின் சிறப்பம்சம். பங்குனி உத்திரம் உள்ளிட்டதிருக்கார்த்திகை திருநாளில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. பௌர்ணமி திருநாளில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். முருகப்பெருமானின் கார்த்திகை, சஷ்டி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

ஆரூர் பாலமுருகன் ஆலயம் 1971-ம் வருடம் தை மாதம் 13–ம் நாள் தைப்பூச திருநாளில் (27.01.1971) பாலமுருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 53 ஆண்டுகளாக பாலமுருகன் கோவில் பாலமுருகனை வழிபாடு செய்து, நற்பலன்கள் பெற்று செல்கின்றனர்.


தல அமைப்பு:

சிறிய குன்றின் மீதுள்ள இம்மலைக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் குழந்தை வடிவில், கருணை முகத்துடன் நின்ற கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை வாயிலில் இருபுறமும் விநாயகரும், அம்பாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, பௌர்ணமி (கிரிவலம்), கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

கேட்கும் வரங்கள் நிறைவேற, பிணிகள் அகல, மன நிமதி பெற சந்தான பாக்கியம் கிட்ட, விவசாயம் செழிக்க, கல்வி, ஞானம் மேம்பட


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


பிணிகள் அகல அருளும் திருவண்ணாமலை வந்தவாசி ஆரூர் பாலமுருகன் திருத்தாள் பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1083 கேட்கும் வரங்களை அள்ளி வழங்கும் திருவண்ணாமலை வந்தவாசி ஆரூர் பாலமுருகன்


படம் 2 - 1083 பிணிகள் அகல அருளும் திருவண்ணாமலை வந்தவாசி ஆரூர் பாலமுருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்