கோவில் 1089 - சென்னை முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1089

பிணிகள் தீர்க்கும் சென்னை முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

1.6.2024 சனி


அருள்மிகு அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

முகலிவாக்கம்

சென்னை-6000125

சென்னை மாவட்டம்

இருப்பிடம்: போரூர் 5 கிமீ, கிண்டி 8 கிமீ, கோயம்பேடு 10 கிமீ, பூவிருந்தவல்லி 12 கிமீ


மூலவர்: அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி தெய்வானை


தல மகிமை:

சென்னை மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள கிண்டி ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் முகலிவாக்கத்தில் பிணிகள் யாவும் தீர்க்கும் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார். அருகிலிருக்கும் போரூரிலிருந்து 5 கிமீ, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ, பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலின் அருகில் பிரசித்தி பெற்ற அகஸ்தீவரர் கோவில் இருப்பது சிறப்பம்சம்.


இக்கோவிலில் முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாக பெருவிழா (11 நாள்) கொடியேற்றத்துடன் கோவிலின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளன்று 108 பால்குடம் ஏந்தி வந்து வள்ளி, தெய்வானை சமேதஅகத்திய சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் சிறப்புற நடைபெறுகின்றது. அகத்திய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

இக்கோவில் பழமையானதாகக் கருதப்படுகின்றது.


தல அமைப்பு:

இக்கோவிலின் கருவறையில் மூலவராக அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் பொலிவுடன் வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. பிரசித்தி பெற்ற அகத்திய விநாயகரும் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

பிணிகள் தீர, வேண்டும் வரங்கள் நிறைவேற, தீவினைகள் அகல, குழந்தை, திருமணம் வேண்டி, தொழில் மேம்பட


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


வேண்டும் வரங்களை நிறைவேற்றும் சென்னை முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமியை மனமுருகி துதிப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1089 பிணிகள் தீர்க்கும் சென்னை முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1089 வேண்டும் வரங்களை நிறைவேற்றும் சென்னை முகலிவாக்கம் அகத்திய சிவசுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்