கோவில் 1084 - திருவண்ணாமலை வந்தவாசி தென்சேந்தமங்கலம் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1084

செல்வம் பெருக அருளும் திருவண்ணாமலை வந்தவாசி தென்சேந்தமங்கலம் முருகன் கோவில்

27.5.2024 திங்கள்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

தென்சேந்தமங்கலம்-604404

(சேந்தன் குன்று}

வந்தவாசி வட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்

இருப்பிடம்: வந்தவாசி 7 கிமீ, திருவண்ணாமலை 56 கிமீ, காஞ்சிபுரம் 48 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி தெய்வானை


தல மகிமை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரிலிருந்து வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 7 கிமீ தொலைவில் இருக்கும் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சிறிய மலைக் குன்றில் செல்வம் பெருக அருளும் முருகன் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை நகரிலிருந்து 56 கிமீ தொலைவு, காஞ்சிபுரம் நகரிலிருந்து 48 கிமீ பிரயாணம் செய்தாலும் தென்சேந்தமங்கலம் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவராக முருகன் வள்ளி, தெய்வானையோடு அருளாட்சி செய்கின்றார்.


இக்கோவில் முருகப்பெருமான் வல்லக்கோட்டை முருகப்பெருமான் போல நெடிதுயர்ந்த தோற்றத்தில் மிகவும் ஆற்றலுடன் அருள்வது சிறப்பம்சமாகும். வள்ளி, தெய்வானை இருவரும் உயரமாக இருப்பதும் இக்கோவிலின் சிறப்பம்சம். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே இக்கோவில் முருகப்பெருமான் மற்றும் தேவியர்தான் அதிக உயரமுடையவர்கள் என்பது மகிமை. இக்கோவிலுக்கு 20 அடிக்கு முன்னர் முருகன் பாதம் போன்ற அமைப்பு இருப்பதாக ஐதீகம். கடைசி சனிக்கிழமை முருகப்பெருமானுக்கு எண்ணெய் காப்பு நடைபெறுவது விசேஷம். 18 செவ்வாய்க்கிழமைகள் இந்த முருகனை (நேரில் அல்லது ஒரு தடவை நேரில்+மீதி மனக்கண்) வழிப்பட்டு வருவோருக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும். சொத்து வந்து சேரும். செல்வம் பெருகும். வேலை, பதவி உயர்வு கிடைக்கும். முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.

தல வரலாறு:

தென்சேந்தமங்கலம் குன்றின் மீது உள்ள முருகன் பாதம் அருகில் முருகன் கோவில் கட்டுவதற்காக சுற்றியுள்ள கிராம மக்கள் 7 தலைமுறைகளாக முயற்சி செய்தும் கட்டமுடியவில்லை. பின்னர் முத்துவேல் சித்தர் என்ற மகானும் முருகன் கோவில் கட்ட மிகுந்த முயற்சி செய்தார். பின்னர் பல வருடங்கள் கழித்து முருகன் மற்றும் வள்ளி, தெய்வானை சிலைகள் ஆகம விதிப்படி செய்யப்பட்டது. இச்சிலைகள் செய்வதற்கு 7-8 வருடங்கள் ஆனது. 2021 அக்டோபர் மாதம் (ஆவணி மாதம்) இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.


தல அமைப்பு:

இக்கோவிலில் மூலவர் முருகன் நெடிதுயர்ந்த தோற்றத்தில் கருணையே வடிவாக நெடிதுயர்ந்த வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மயில் மற்றும் பலிபீடம் உள்ளது. விநாயகரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, பௌர்ணமி, அமாவாசை, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

செல்வம் பெருக, சொத்து சேர, வேண்டிய வரம் கிடைக்க, வேலை, பதவி உயர்வு கிடைக்க, குழந்தை வேண்டி, திருமணம் நடைபெற, கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க, குடும்பம் சிறக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் திருவண்ணாமலை வந்தவாசி தென்சேந்தமங்கலம் முருகனை வேண்டி வழிபடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1084 செல்வம் பெருக அருளும் திருவண்ணாமலை வந்தவாசி தென்சேந்தமங்கலம் முருகன்


படம் 2 - 1084 கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் திருவண்ணாமலை வந்தவாசி தென்சேந்தமங்கலம் முருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்