கோவில் 1021 - ஈரோடு பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1021
வாழ்வு மேம்பட அருளும் ஈரோடு பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமி கோவில்
25.3.2024 திங்கள்
அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் [TM012545]
பிரம்மதேசம்-638315
அந்தியூர் வட்டம்
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: ஈரோடு 33 கிமீ, பவானி 18 கிமீ, அந்தியூர் 5 கிமீ
மூலவர்: முத்துக்குமார சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகரிலிருந்து 33 கிமீ தொலைவில் இருக்கும் பிரம்மதேசம் என்ற கிராமத்தில் வாழ்வு மேம்பட அருளும் முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்தியூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும், பவானியிலிருந்து 18 கிமீ தொலைவிலும் இருக்கும் பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமி கோவிலில் முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார்.
இத்திருத்தலத்தில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை, சஷ்டி தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
பழைமையான இக்கோவில் தற்போது இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவராக முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். எதிரில் அழகிய மயில் உள்ளது. மேலும் விநாயகர், நாகர்கள், சிவன், அம்பாள் முதலிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வாழ்வு மேம்பட, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டி, விவசாயம், தொழில் சிறக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 7-11 மாலை 4-6
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் ஈரோடு பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமியை போற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1021 ஈரோடு பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமி கோவில்
படம் 2 - 1021 நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் ஈரோடு பிரம்மதேசம் முத்துக்குமார சுவாமி கோவில்
Comments
Post a Comment