கோவில் 1022 - கடலூர் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-1022

ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் கடலூர் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

26.3.2024 செவ்வாய்


அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

வன்னியர்புரம்-607102

நடுவீரபட்டு

கடலூர் மாவட்டம்

இருப்பிடம்: கடலூர் 20 கிமீ, பண்ருட்டி 12 கிமீ


மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கடலூர் மாவட்டம் கடலூர் மாநகரிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் வன்னியர்புரம் பகுதியில் ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பண்ருட்டியிலிருந்து 12 கிமீ பிரயாணம் செய்தாலும் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார். முருகப்பெருமானின் திருவிழாக்கள் சிறப்பாக ந்டைபெறுகின்றன.


தல வரலாறு:

இக்கோவில் பழமையானதாக கருதப்படுகிறது.


தல அமைப்பு:

அழகிய சிற்பங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் சிவசுப்பிரமணிய சுவாமி கையில் வேலேந்தி வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் உட்பட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

சகல ஐஸ்வர்யங்கள் பெருக, பிணிகள் அகல, கல்யாண வரம் கிட்ட, சந்தான பாக்கியம் வேண்டி, கேட்டது கிடைக்க

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


பிணிகள் அகல அருளும் கடலூர் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமியை சிரம் தாழ்த்தி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1022 ஐஸ்வர்யங்கள் பெருக அருளும் கடலூர் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமி

படம் 2 - 1022 பிணிகள் அகல அருளும் கடலூர் வன்னியர்புரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்


 

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்