கோவில் 1024 - திண்டுக்கல் S தும்மலபட்டி பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1024

தோல் நோய்களை தீர்க்கும் திண்டுக்கல் S தும்மலபட்டி பாலசுப்பிரமணியர் கோவில்

28.3.2024 வியாழன்


அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் [TM016524]

[S. தும்மலபட்டி-624211

[தும்மலபட்டி]

நிலக்கோட்டை வட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

இருப்பிடம்: நிலக்கோட்டை 8 கிமீ, திண்டுக்கல் 30 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் நிலக்கோட்டையிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் தும்மலபட்டி கிராமத்தில் பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாநகரிலிருந்து 30 கிமீ பிரயாணம் செய்தால், தும்மலபட்டி பாலசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். பழனி கோவில் முருகனுக்கு நிகரானவர் இந்த பாலசுப்பிரமணியர் என்று பக்தர்கள் கூறுகின்றனர். மிகவும் சக்தி நிறைந்த பாலசுப்பிரமணியரை வழிபட்டு கோவில் தீர்த்தம் தடவினால் தோல் அலர்ஜி, சரும பிரச்சனை வேகமாக குணமாகும் என்பது நம்பிக்கை.


ஒவ்வொரு ஆண்டும் 6-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திர திருவிழா இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருவிழா. பால்குடம், புஷ்ப காவடி, பிற காவடிகள் ஏந்தி ஏராளமான பக்தர்கள் வந்து, இக்கோவில் முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.


தல வரலாறு:

இப்பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாக கருதப்படுகிறது. சத்துசதை சுவாமி என்ற சித்தர் இக்கோவிலில் வழிபட்டு வந்ததால் இக்கோவில் மூலவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக உள்ளார்.


தல அமைப்பு:

இக்கோவிலில் அழகிய கொடிமரம் உள்ளது. கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவன், அம்பிகை உட்பட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். 


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

தோல் நோய்களை தீர, கேட்ட வரம் கிடைக்க, வாழ்வில் முன்னேற்றம் பெற, பிணிகள் அகல, மன நிம்மதி பெற, நல்லன நடக்க, நினைத்த காரியம் கைக்கூட

நேர்த்திக்கடன்:

பால்குடம், புஷ்ப காவடி, பிற காவடிகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


கேட்ட வரம் தரும் திண்டுக்கல் S தும்மலபட்டி பாலசுப்பிரமணியர் திருப்பாதம் பற்றி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 -  1024 தோல் நோய்களை தீர்க்கும் திண்டுக்கல் S தும்மலபட்டி பாலசுப்பிரமணியர்


படம் 2 - 1024 கேட்ட வரம் தரும் திண்டுக்கல் S தும்மலபட்டி பாலசுப்பிரமணியர்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்