கோவில் 476 - நாமக்கல் மாவட்டம் அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-476
செவ்வாய்க்கிழமை செவ்வேளின் பிணி தீர்க்கும் நாமக்கல் மாவட்டம் அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
27.9.22 செவ்வாய்
அருள்மிகு அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
படமுடிப்பாளையம்
பரமத்தி வேலூர் (ப.வேலூர்)-638182
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 22 கிமீ, பரமத்தி வேலூர் 7 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தாயார்: வள்ளி, தெய்வானை
பழைமை: பல நூறு வருடங்கள்
தல மகிமை:
நாமக்கல் மாவட்டம் ப. வேலூரிலிருந்து 7 கிமீ தொலைவிலுள்ள படமுடிப்பாளையம் எனும் ஊரில் அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமான் கோவில் சிறிய கோவிலாக இருந்தாலுன், இதன் கீர்த்தி பெரியது. இந்த பழமையான கோவிலில் முருகன் தனது தேவியருடன் அருளுகிறார்.
இத்திருத்தலத்தில் முருகப்பெருமானது அனைத்து விசேஷங்க்ளும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு:
இந்தக் கோவிலில் உள்ள முருகப்பெருமான் கையில் வேல், தண்டம் இல்லை. எனவே இது பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிகப் பழமையான கோவில் என்று வரலாற்று செய்திகள் கூறுகின்றன,
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக நான்கு திருக்கரங்களுடன் அழகிய திருமேனியராக திருக்காட்சி த்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானது திருக்கரங்களில் வேலோ அல்லது தண்டமோ ஏந்தாமல் திருக்காட்சி அளிக்கின்றார். எனவே இது ஒரு மிகப் பழமையான கோவிலாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். விநாயகர், இடும்பன் மற்றும் பிற தெய்வங்களும் இத்தல்த்தில் அருளுகின்றனர். கோவிலுக்கு முன்பாக உள்ள ஊஞ்ச மரத்திடையில் ஒரு கல் வடிவம் உள்ளது அருணகிரிநாதப் பெருமான் வழிப்பட்ட வடிவம் என்று கூறுகின்றனர். .
திருவிழா:
வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரப், தைப்பூசம்
பிரார்த்தனை:
பிணிகள் தீர, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, கேட்ட வரம் நிறைவேற
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவ்டி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் நாமக்கல் மாவட்டம் அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - பிணி தீர்க்கும் நாமக்கல் மாவட்டம் அருணகிரிமலை சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment