கோவில் 1848 - கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1848
விருப்பங்களை நிறைவேற்றும் கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் கோவில்
30.06.2026 செவ்வாய்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
[அ/மி விநாயகர், பாலமுருகன் திருக்கோவில்]
முட்டியம் 606205
திருக்கோவிலூர் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 33 கிமீ, ரிஷிவந்தியம் 8 கிமீ, தியாகதுருகம் 17 கிமீ, திருக்கோவிலூர் 24 கிமீ, உளுந்தூர்பேட்டை 38 கிமீ, திருவண்ணாமலை 52 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: பாலமுருகன்
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் முட்டியம் கிராமத்தில் விருப்பங்களை நிறைவேற்றும் கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் விநாயகப் பெருமானும் மற்றொரு மூலவ மூர்த்தியாக இருப்பதால், இத்திருக்கோவில் அ/மி விநாயகர், பாலமுருகன் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 52 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் முட்டியம் பாலமுருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் அழகு பாலகனாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றன. மேலும் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, சதுர்த்தி முதலான நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. விநாயகர் சதுர்த்தி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் ரிஷிவந்தியம் வட்டாரத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றத் திருக்கோவிலாகும்..
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் கோவில் சிறிய கோவிலாக இருந்தாலும் அழகுற அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் கையில் வேலுடன் அழகு பாலகனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர் மற்றொரு மூலவராக ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி
பிரார்த்தனை:
விருப்பங்கள் நிறைவேற, நல்லன அருள, கல்வி சிறக்க, வியாபாரம் மேம்பட, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, பாவங்கள் தீர, வினைகள் போக்க, பிணிகள் அகல, மன அமைதி கிட்ட, இன்பம் பொங்க, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நல்லன அருளும் கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகனை போற்றி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1848 விருப்பங்களை நிறைவேற்றும் கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன்
படம் 2 - 1848 நல்லன அருளும் கள்ளக்குறிச்சி முட்டியம் பாலமுருகன் கோவில்
Comments
Post a Comment