கோவில் 1843 - கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1843

நல்லன அருளும் கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

25.06.2026 வியாழன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM020524]

நாகலூர் 606203

கள்ளக்குறிச்சி வட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 21 கிமீ, தியாகதுருகம் 12 கிமீ, உளுந்தூர்பேட்டை 32 கிமீ, சங்கராபுரம் 39 கிமீ, திருக்கோவிலூர் 48 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் நாகலூர் கிராமத்தில் நல்லன அருளும் கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் உளுந்தூர்பேட்டை நகர் அருகில் இருப்பதால், நாகலூர் என்றழைக்கப்படுகிறது.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 39 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் நாகலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.


கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா தினசரி சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமியின் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான திருக்கோவிலாகக் கருதப்படுகிறது. தற்போது இந்து அறநிலையத்துறை இத்திருக்கோவிலை நிர்வகித்து வருகின்றது.


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகம விதிகளின் படி அழகிய கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நல்லன அருள, செல்வம் பெருக, வேண்டும் வரம் கிட்ட, இரு வினைகள் நீங்க, பிணிகள் தீர, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, மன தைரியம் பெற, இடர்கள் களைய, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, வியாபாரம் விருத்தியடைய, தோஷங்களை விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻 


படம் 1 - 1843 நல்லன அருளும் கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமி [HRCE Photo]



படம் 2 - 1843 செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி நாகலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் [HRCE Photo]

Comments

Popular posts from this blog

கோவில் 320 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1602 - மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்