கோவில் 1846 - கள்ளக்குறிச்சி திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1846
செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
28.06.2026 ஞாயிறு
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM023206]
திம்மச்சூர் 605751
திருக்கோவிலூர் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 42 கிமீ, ரிஷிவந்தியம் 17 கிமீ, திருக்கோவிலூர் 21 கிமீ, தியாகதுருகம் 26 கிமீ, உளுந்தூர்பேட்டை 40 கிமீ, திருவண்ணாமலை 44 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் திம்மச்சூர் கிராமத்தில் செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலிற்கு அருகில் மிகவும் பிரசித்திப் பெற்ற திம்மச்சூர் அம்மச்சார் கோவில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 44 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
கள்ளக்குறிச்சி திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமியின் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகப் பழமையான திருக்கோவிலாக கருதப்படுகிறது. தற்போது இந்து அறநிலயத் துறையினரால் இத்திருக்கோவில் நிர்வாகம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, அல்லல்கள் அகல, நினைத்த்து நடைபெற, வினைகள் நீங்க, பிணிகள் அகல, திருமணப்பேறு வேண்டி, குழந்தை வரம் கிட்ட, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்ல எண்ணங்கள் உருவாக, மன அமைதி பெற, நல்லன அருள, தொழில் மேம்பட, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
அல்லல்கள் அகற்றி அருளும் கள்ளக்குறிச்சி திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி திருவடி தொழுது கும்பிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1846 செல்வம் பெருக அருளும் கள்ளக்குறிச்சி திம்மச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment