கோவில் 1841 - கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1841

ஞானத்தை அள்ளி வழங்கும் கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் கோவில்

23.06.2026 செவ்வாய்


அருள்மிகு முருகன் திருக்கோவில் [TM023009]

[அ/மி பிள்ளையார், மாரியம்மன், முருகன், கன்னிமார், பிடாரி, அய்யனார் திருக்கோவில்]

மேலந்தல் 605757

திருக்கோவிலூர் வட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்


இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 46 கிமீ, திருக்கோவிலூர் 26 கிமீ, திருவண்ணாமலை 26 கிமீ, சங்கராபுரம் 28 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன்


தல மகிமை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் மேலந்தல் கிராமத்தில் ஞானத்தை அள்ளி வழங்கும் கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் பிள்ளையார், மாரியம்மன், முருகன், கன்னிமார், பிடாரி, அய்யனார் திருக்கோவில் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது.


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 26 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவு அல்லது சங்கராபுரம் 28 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் மேலந்தல் முருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேல் கொண்டு வீற்றிருந்து அருள்புரிகின்றார்.


கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் கந்த சஷ்டி திருவிழா தினசரி சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. இத்திருக்கோவிலில் முருகப்பெருமானின் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் திருக்கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும். தற்போது இத்திருக்கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை துறையினரால் நிர்வகிக்கப்படுகின்றது.


தல அமைப்பு:

கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், பிள்ளையார், மாரியம்மன், கன்னிமார், பிடாரி, அய்யனார் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

.

திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

ஞானத்தை அள்ளி வழங்க, விருப்பங்கள் நிறைவேற, வினைகள் விலக, பிணிகள் தீர, சந்தான பாக்கியம் வேண்டி, பாவங்கள் விலக, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, உடல்நலன் சீராக, மன மகிழ்ச்சி கிட்ட, நல்லன அருள, வியாபாரம் மேம்பட, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


விருப்பங்களை நிறைவேற்றி அருளும் கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் திருப்பாதங்கள் பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1841 ஞானத்தை அள்ளி வழங்கும் கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் கோவில்


படம் 2 - 1841 விருப்பங்களை நிறைவேற்றி அருளும் கள்ளக்குறிச்சி மேலந்தல் முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 320 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1602 - மலேசியா ஜோகூர் தம்போய் சுப்ரமணியர் கோவில்