கோவில் 1844 - கள்ளக்குறிச்சி வடமருதூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1844
வினைகள் தீர்க்கும் கள்ளக்குறிச்சி வடமருதூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
26.06.2026 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
வடமருதூர் 605803
திருக்கோவிலூர் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி 53 கிமீ, திருக்கோவிலூர் 10 கிமீ, ரிஷிவந்தியம் 28 கிமீ, தியாகதுருகம் 37 கிமீ, திருவண்ணாமலை 42 கிமீ, உளுந்தூர்பேட்டை 45 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் வடமருதூர் கிராமத்தில் நல்லன அருளும் கள்ளக்குறிச்சி வடமருதூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது ரிஷிவந்தியம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது தியாகதுருகம் பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு பிராயணம் செய்தால் வடமருதூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
கள்ளக்குறிச்சி வடமருதூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா தினசரி பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமியின் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி வடமருதூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றத் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
கள்ளக்குறிச்சி வடமருதூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பொலிவுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் உற்சவர், விநாயகர், அம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வினைகள் தீர, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, கேட்ட வரம் கிடைக்க, பிணிகள் போக்க, திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு மேம்பட, நல்லன அருள, நோய்கள் குணமடைய, மன அமைதி உண்டாக, அல்லல்கள் அகல, தோஷங்களை விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் கள்ளக்குறிச்சி வடமருதூர் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1844 வினைகள் தீர்க்கும் கள்ளக்குறிச்சி வடமருதூர் சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment