கோவில் 778 - திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                  தினம் ஒரு முருகன் ஆலயம்-778

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

26.7.2023 புதன்


அருள்மிகு புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

புஷ்பகிரி மலை

துரிஞ்சாபுரம்-606805

திருவண்ணாமலை மாவட்டம்

இருப்பிடம்: திருவண்ணாமலை 15 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

பழமை: 200 ஆண்டுகள்


தலமகிமை:

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள துரிஞ்சாபுரம் கிராமத்தில் இருக்கும் புஷ்பகிரி என்ற பாறையின் மீது பிரசித்தி பெற்ற புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார்.


இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஷோடஸோபாசார தீபாராதனை நடைபெறும். ஏராளாமான பக்த பெருமக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன் காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அதிக அளவில் வரும் காவடிகள், முருகப்பெருமான் சந்திக்குள் செல்ல முடியாததால், 2020-ல் ஒரு அழகிய திருமண மண்டபம் கட்டி, காவடிகளை இங்கு வைத்து முருகப்பெருமானை வழிபட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஏராளமான திருமணங்களும் இம்மண்டபத்தில் நடக்கின்றன. சஷ்டி, திருநாட்களில் பாலசுப்பிரமணிய சுவாமி விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடக்கின்றன. மேலும் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்களும் சிறப்பாக நடக்கின்றது.


தல வரலாறு:

200 ஆண்டுகளுக்கு முன்னர். சுப்பா ரெட்டியார் என்ற சிறந்த பக்தர்ர் மூலம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டப்பட்டது. திருக்கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன் பிப்ரவரி, 2020-ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய வண்ண சிற்பங்களுடன் கூடிய இக்கஒவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேதராக மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி நின்ற நிலையில் திருக்கோலம் அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், இடும்பன், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் கிடைக்க, சகல சௌபாக்கியங்கள் வேண்டி, நேர்மறை ஆற்றல் உண்டாக, திருமண பாக்கியம், குழந்தை வரம் வேண்டி


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


சகல சௌபாக்கியங்கள் அருளும் திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி பணிந்து தொழுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 778 சகல சௌபாக்கியங்கள் அருளும் திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி  ஆடிக்கிருத்திகையில் சந்தன காப்பு


படம் 2 - 778 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி  தேவியருடன்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்