கோவில் 779 - திண்டுக்கல் எஸ். தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-779

திருப்பங்கள் தரும் திண்டுக்கல் எஸ். தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில்

27.7.2023 வியாழன்


அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

எஸ். தும்மலப்பட்டி-614617

நிலக்கோட்டை வட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

இருப்பிடம்: நிலக்கோட்டை 44 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

பழமை: 100 ஆண்டுகள் மேல்


தலமகிமை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் நிலக்கோட்டையிருந்து 44 கிமீ தொலைவில் உள்ள எஸ். தும்மலப்பட்டி பிரசித்திப் பெற்ற பாலசுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமான் பழனி முருகனைப் போல சக்தி உடையவர். அலர்ஜி, தோல் நோய்கள் உட்பட அனைத்து நோய்களையும் இக்கோவில் முருகப்பெருமான் தீர்த்து அருள்கின்றார்.


இக்கோவிலில் பங்குனி உத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு (2023). நூறாம் ஆண்டு (100 ஆண்டுகள்) பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் மயில் காவடி, தீர்த்தக் காவடி, பால் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏராளமான முருக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து பலன் பெற்று செல்கின்றனர். தைப்பூசம் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் இதர முருகப்பெருமான் திருநாட்கள் மற்றும் சஷ்டி, கிருத்திகை தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

இந்த ஊர் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர். இக்கோவில் கட்டப்பட்டது.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகப்பெருமான், பாலசுப்பிரமணியர் என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், சக்தி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

வாழ்க்கையில் திருப்பங்கள் தர, நல்லன பெற வேண்டி, எண்ணியது நடக்க, நோய்கள் குணமாக


நேர்த்திக்கடன்:

பால்குடம், மயில் காவடி, தீர்த்தக் காவடி, பால் காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


நல்லன அருளும் திண்டுக்கல் எஸ்.தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியரை மனக்கண்ணால் தரிசிப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 779 திருப்பங்கள் தரும் திண்டுக்கல் எஸ். தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர்


படம் 2 - 779 நல்லன அருளும் திண்டுக்கல் எஸ்.தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்