கோவில் 777 - மன்னார்குடி ராமநாதன் தெரு பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-777
திருமண வரம் தரும் மன்னார்குடி ராமநாதன் தெரு பாலமுருகன் கோவில்
25.7.2023 செவ்வாய்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
ராமநாதன் தெரு
மும்மூர்த்தி விநாயகர் தெரு சந்திப்பு
மன்னார்குடி-614001
திருவாரூர் மாவட்டம்
இருப்பிடம்: மன்னார்குடி 1 கிமீ
செல்: பக்கிரிசாமி 78128 76652, பாஸ்கர் 93603 87251
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: பாலமுருகன்
தலமகிமை:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மையப்பகுதியில் 1 கிமீ தொலைவில் ஹரித்ரா நதியின் தென் திசையில் ராமநாதன் தெருவின் மையப்பகுதியில் [மும்மூர்த்தி விநாயகர் தெரு சந்திப்பு] அழகிய, பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மூர்த்தி சிறிதென்றாலும், கீர்த்தி பெரிதான இந்த ஆலயத்தில் பாலமுருகன் அருள்கின்றார். இக்கோவிலுக்கு மிக அருகில் சிறப்பு மிக்க ஸ்ரீவித்யா ராஜகோபால் சுவாமி ஆலயம் [400 மீ] இருப்பது சிறப்பம்சமாகும். மேலும் மும்மூர்த்தி விநாயகர் கோவில், சேவராய அய்யனார் கோவில்களும் அருகில் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. பொருளுதவி, நன்கொடை தர விரும்பும் பக்தர்கள், கோவிலை அணுகி செலுத்தலாம்.
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருநாள் சிறப்பாக நடைபெறுகிறது. தைப்பூசத் திருநாளில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்று சுவாமி புறப்பாடு நடக்கின்றன, மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை பூஜைகள் நடைபெறுகின்றது. முருகப்பெருமானின் இதர திருநாட்களிலும் சிறப்பு வழிபாடு உண்டு.
தல வரலாறு:
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் வசிக்கும் பக்தர்களின் பேருதவியால், இந்த திருக்கோவில் நிறுவப்பட்டு 09.02.2011-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது (2023) கோவில் புனரமைக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவராக பாலமுருகன் சிறிய கீர்த்தியுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கோவிலுக்கு அருகில் ஆதி பாலமுருகன் (பழைய மூலவர்) நாகர் உடனிருக்க அருளாட்சி செய்கின்றார்.
திருவிழா:
சித்ரா பவுர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மார்கழி அதிகாலை பூஜை
பிரார்த்தனை:
திருமண வரம் வேண்டி, குழந்தைப்பேறு வேண்டி, கல்வி, ஞானம் சிறக்க, நினைத்தது நடைபெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
சந்தானப்பேறு வழங்கும் மன்னார்குடி ராமநாதன் தெரு பாலமுருகனை வணங்கி நற்பலன்கள் பெற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 777 திருமண வரம் தரும் மன்னார்குடி ராமநாதன் தெரு பாலமுருகன்
படம் 2 - 777 குழந்தைப்பேறு வழங்கும் மன்னார்குடி ராமநாதன் தெரு பாலமுருகன் கோவில் ஆதி பாலமுருகன்
Comments
Post a Comment