கோவில் 783 - சென்னை அகரம் ஆறுமுகசுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-783
மனக்குறைகள் தீர்க்கும் சென்னை அகரம் ஆறுமுகசுவாமி கோவில்
31.7.2023 திங்கள்
அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோவில்
பல்லார்ட் சாலை
அகரம்
பெரம்பூர்
சென்னை 600082
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 7 கிமீ, கோயம்பேடு 13 கிமீ
மூலவர்: ஆறுமுகசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரலிலிருந்து 7 கிமீ பிரயாணம் செய்தாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ பிரயாணம் செய்தாலும் சிறப்பு வாய்ந்த அகரம் ஆறுமுகசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் ஆறுமுகங்களுடன் ஆறுமுகசுவாமி எழுந்தருளி பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கின்றார்.
இக்கோவிலில் முருகப்பெருமானை அனைத்து திருவிழாக்களும் மிகவும் விமரிசையாக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
இப்பகுதியில் வசிக்கும் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் கட்டிய கோவில் இதுவாகும்,
தல அமைப்பு:
இத்திருக்கோவில் கருவறையில் மூலவராக முருகப்பெருமான், 6 தலைகள், 12 திருக்கரங்களுடன் கொண்ட ஆறுமுக சுவாமியாக வள்ளி, தெய்வானை சமேதராக பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், உண்ணாமனை சமேத சிவபெருமான், துர்க்கை, மகா விஷ்ணு, மகா லட்சுமி, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோர் தனி சந்நிதிகளில் அருளுகின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மனக்குறைகள் தீர. நல்லன நடக்க, கல்வி, ஞானம் மேம்பட, செல்வம் செழிக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 7-10 மாலை 5.3-8
நல்லன நடக்க அருளும் சென்னை அகரம் ஆறுமுகசுவாமியை ஆனந்தமாக வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment