கோவில் 781 - சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                     தினம் ஒரு முருகன் ஆலயம்-781

திருமண வரமருளும் சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில்

29.7.2023 சனி


அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

சின்னையன் காலனி

பெரம்பூர்

சென்னை 600011

இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 6 கிமீ, கோயம்பேடு 14 கிமீ


மூலவர்: மேல்பழனி ஆண்டவர்/பழனி ஆண்டவர்


தலமகிமை:

சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரலில் இருந்து 6 கிமீ தொலைவிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 14 கிமீ தூரத்தில் உள்ள முக்கிய பகுதியான பெரம்பூரில், பெரம்பூர் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் திருமண வரமருளும் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தீமைகளுக்கும் சாமுண்டிகா சமேத ஸ்வர்ண ஆகர்ஷ பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யலாம்.

கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஏராளாமான பக்தர்கள் விரதமிருந்து முருகப்பெருமானின் அபிஷேகம், அலங்காரம், விசேஷ தீபாராதனை, சூரசம்ஹாரம், தெய்வானை திருமணம் கண்டு வழிபட்டு, அதிக பலன்கள் பெறுகின்றனர். பங்குனி உத்திர திருநாளில் முருகப்பெருமான்-வள்ளிக் கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, வைகாசி விசாகம் என அனைத்து விசேஷங்களும் நடைபெறுகின்றது. சஷ்டி, கிருத்திகை தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றனர். துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை நடத்தப்படுகின்றன.

முருகன் கோவிலில் சஷ்டிக்கு கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் விழாவை கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.


இந்த கோவிலில் முக்கிய அம்சமாக திருமணம் ஜாதகம் இலவசமாக ஆண் பெண் இருவருக்கும் பார்க்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஜாதகம் பார்க்கப்படும். அனைத்து சமூகத்திற்கும் பெண் பார்க்க, மாப்பிள்ளை பார்க்க இங்கு செல்லலாம். ஆகையால் இக்கோவிலில் அதிகமளவில் திருமணங்கள் நடக்கின்றன.


தல வரலாறு:

பெரம்பூரில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் கோவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. 1936 முதல் இன்று வரை நான்கு கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீ ஜெயேந்திரர் மற்றும் ஸ்ரீ விஜயேந்திரர் இருவரும் 1992-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர்.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் மூலவராக உள்ள பழனி ஆண்டவர் பழனி முருகனைப் போலவே அழகிய தோற்றத்தில், நின்ற கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்வர்ணாம்பிகை சமேத சிவபெருமான், அம்மன்/அம்பாள், நாராயணர், லஷ்மி, அனுமன், துர்க்கை, பைரவர், சாமுண்டிகா, நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் தனி சந்நிதிகளில் அருளுகின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

திருமணம் வேண்டி, செல்வம் பெருக, குழந்தை வேண்டி, மன அமைதி கிடைக்க, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் நலன் வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


செல்வ வளம் பெருக்கும் சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர் திருப்பாதங்கள் பணிந்து வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 781 திருமண வரமருளும் சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர்


படம் 2 - 781 செல்வ வளம் பெருக்கும் சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்