கோவில் 780 - சென்னை அயனாவரம் மேல்பழனி ஆண்டவர் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-780
வரங்களை அள்ளி வழங்கும் சென்னை அயனாவரம் மேல்பழனி ஆண்டவர் கோவில்
28.7.2023 வெள்ளி
அருள்மிகு மேல்பழனி ஆண்டவர் திருக்கோவில்
குப்புசாமி நகர்
அயனாவரம்
சென்னை 600023
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 7 கிமீ, கோயம்பேடு 8.5 கிமீ
மூலவர்: மேல்பழனி ஆண்டவர்/பழனி ஆண்டவர்
தலமகிமை:
சென்னை மாநகரின் மையப்பகுதியில் சென்னை சென்ட்ரலில் இருந்து 7 கிமீ தொலைவிலும், கோயம்பேட்டில் இருந்து 8.5 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள அயனாவரம் பகுதியில் உள்ள குப்புசாமி நகரில் வரங்களை அள்ளி வழங்கும் மேல்பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவர் மேல்பழனி ஆண்டவர் பழனி முருகனை போல சக்தி மிகுந்தவர் எனவும், இவரை வழிபடுவோருக்கு நற்பலன்கள் அனைத்தும் வழங்குகின்றார் என்பது நம்பிக்கை.
இக்கோவிலில் தைப்பூசம் மற்றும் ஆடிக்கிருத்திகை திருவிழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் முதலான திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் விசேஷ வழிபடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
இப்பகுதி புரவலர்கள் மற்றும் சைவ பெருமக்கள் சேர்ந்து இக்கோவிலை கட்டினார்கள்.
தல அமைப்பு:
மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் நுழைவு வாயிலில் உள்ளது, மூலவராக மேல்பழனி ஆண்டவர் வீற்றிருந்து பழனி திருத்தலத்து முருகப்பெருமானை போல பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, சிவபெருமான், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் தனி சந்நிதியில் அருளுகின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வரங்கள் வேண்டி, மன அமைதி பெற, வாழ்வு சிறக்க, குடும்ப ஒற்றுமை ஓங்க, கல்வி, ஞானம் மேம்பட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
மன அமைதி தரும் சென்னை அயனாவரம் மேல்பழனி ஆண்டவரை போற்றி புகழ்ந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 780 வரங்களை அள்ளி வழங்கும் சென்னை அயனாவரம் மேல்பழனி ஆண்டவர்
படம் 2 - 780 மன அமைதி தரும் சென்னை அயனாவரம் மேல்பழனி ஆண்டவர்
Comments
Post a Comment