கோவில் 447 - காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டு கந்தசுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-447
சுகப்பிரசவம் அருளும் காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டு கந்தசுவாமி கோவில்
29.8.2022 திங்கள்
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில்
நெற்குணப்பட்டு-603305
செய்யூர் தாலூகா
காஞ்சிபுரம் மாவட்டம்
இருப்பிடம்: மதுராந்தகம் 30 கிமீ, கல்பாக்கம் 12 கிமீ, மகாபலிபுரம் 27 கிமீ, கூவத்தூர் 3.5 கிமீ
மூலவர்: கந்தசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தீர்த்தம்: சங்கு தீர்த்தம்
பழமை: 1000 ஆண்டுகள்
செல்: ஆலய அர்ச்சகர் ஜம்பு குருக்கள் 9943652273, 9786058325.
தலமகிமை:
சென்னை-மகாபலிபுரம்-பாண்டி ECR சாலையில் கூவத்தூரில் இறங்க வேண்டும். அடுத்துள்ள பெரிய பாலாறு பாலம் முடிந்து, வலதுபுறம் மதுராந்தகம் செல்லும் சாலையில் 2 கிமீ சென்றால் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற நெற்குணப்பட்டு கந்தசுவாமி கோவிலை அடையலாம். இத்தலத்தில் முருகப்பெருமான், கந்தசுவாமி என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியருள்கின்றார்.
இத்திருக்கோவிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. ஆலய திருக்குளம் சங்கு தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தை சாப்பிட்டால் சுகப்பிரசவம் நடக்கும் என நம்பிக்கை. இவ்வூருக்கு அருகிலேயே அவ்வையார் மலை அமைந்துள்ளது. இது சந்நியாசி மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் திறந்த வெளியில் ஒரு பழமையான சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்திற்கு அருகில் புனித வசந்தம் உள்ளது. இந்த புனித நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் இம்மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
தல வரலாறு:
சிதம்பரம் சுவாமிகள் இந்த தலத்து முருகனிடம்தான் திருப்போரூர் செல்ல இந்த அனுமதி பெற்றார். பின்னதான திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை எழுப்பினார்.
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் கந்தசுவாமி கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வானை தேவிகளுடன் கோவில் கொண்டு அழகிய கோலத்தில் நின்ற நிலையில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அடுத்து அகஸ்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்கின்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத கரியமாணிக்க பெருமாள் தனி சந்நிதியில் அருள்கின்றார்.. பிரகாரத்தில் விநாயகர், ஐயப்பன், சூரியன் சந்திரன் தட்சிணாமூர்த்தி, துர்க்கை , மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வ திருமேனிகளை தரிசிக்கலாம்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்
பிரார்த்தனை:
சுகப்பிரசவம் வேண்டி, சங்கடங்கள் தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 7-9 மாலை 6-8
சங்கடங்கள் தீர்க்கின்ற காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டு கந்தசுவாமியை மனக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - சுகப்பிரசவம் அருளும் காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டு கந்தசுவாமி
படம் 2 - சங்கடங்கள் தீர்க்கின்ற காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டு கந்தசுவாமி கோவில்
Comments
Post a Comment