கோவில் 344 - வியட்நாம் ஹோ சி மின் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-344

முன்னேற்றம் தரும் வியட்நாம் ஹோ சி மின் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

18.5.22 புதன்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

ஹோ சி மின் நகர் (Ho Chi Minh City),

வியட்நாம் (Vietnam)


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி 

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

வியட்நாம் நாட்டின் முக்கிய பகுதியான ஹோ சி மின் நகரில் உள்ள 98, நாம் கி கோர் ங்லினா தெருவில் தமிழ் கடவுள் முருகனுக்காக அமைந்துள்ள கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். ஹோ சி மின் நகரம், முன்பு சைகோன் (Saigon) என்று அழைக்கப்பட்டது, இது வியட்நாமின் மிகப்பெரிய நகரமாகும். தெற்கு வியட்நாமில் அமைந்துள்ள இந்த நகரத்தை சுற்றி சைகோன் நதி ஓடுவது சிறப்பு. கோவிலின் வலதுபுறத்தில் சிறப்பு மிக்க நவக்கிரகங்கள் 1928-ல் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


இத்திருக்கோவிலுக்கு அருகிலேயே மாரியம்மன் கோவில், தண்டாயுதபாணி கோவில் என்று 2  சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. இந்த நகரில் 3 இந்துக் கோவில்கள் அருகருகே இருப்பது சிறப்பு. 


தலவரலாறு:

தமிழகத்திலிருந்து வியாபாரத்துக்காக சென்ற ஆன்மீக எண்ணங்கள் நிறைந்த நாட்டுக் கோட்டை செட்டியார்கள் உருவாக்கிய கோவில் என்று நம்பப்படுகிறது, 


தல அமைப்பு:

முதன்மை தெய்வமான முருகப்பெருமான் இக்கோவில் கர்ப்பகிரகத்தில் சுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயருடன் வலப்புறம் வள்ளி மற்றும் இடப்புறம் தெய்வானையுடன் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். வாசலில் இடும்பன் காவல் இருக்கிறார். அருகில் விநாயகப்பெருமானும் அவரது இருபக்கத்திலும் ராகு, கேது வீற்றிருந்து அருளுவது சிறப்பு. 


மேலும் வேங்கேடசப்பெருமாள் லட்சுமியுடன் வீற்றிருந்து அருள்கின்றார்.  சிவப்பெருமான், சக்தி, கிருஷ்ணர், சரஸ்வதி, முதலானோரும் இருப்பது சிறப்பம்சம். வசந்த மணடபத்தில் உற்சவ மூர்த்திகள் இருந்து ஆசிர்வதிக்கின்றனர். பிரதான மண்டபத்தில் சிவப்பு வண்ண குதிரை வாகனம் உள்ளது. கோவிலின் வலது புறத்தில் நவக்கிரகங்கள் பட்டு உடுத்தி காட்சியளிக்கின்றனர்.


திருவிழா:

முருகனுக்குரிய விசேஷ நாட்கள்


பிரார்த்தனை:

வாழ்வில் முன்னேற, தோஷங்கள் விலக, உடல் நலன் மேம்பட


நேர்த்திக்கடன்:

சிறப்பு பூஜைகள் 


உடல் நலன் மேமபட அருளும் வியட்நாம் ஹோ சி மின் நகர் சுப்பிரமணிய சுவாமியை தொழுது மகிழ்வோம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - முன்னேற்றம் தரும் வியட்நாம் ஹோ சி மின் நகர் சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - உடல் நலன் மேம்பட அருளும் வியட்நாம் ஹோ சி மின் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்