கோவில் 352 - இலங்கை கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                         

 தினம் ஒரு முருகன் ஆலயம்-352

இகபர சௌபாக்கியங்கள் தரும் இலங்கை கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில்

26.5.22 வியாழன்

அருள்மிகு புதிய கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்

பம்பலப்பிட்டி 

கொழும்பு 

இலங்கை

மூலவர்: கதிர்வேலாயுத சுவாமி (புதிய) மற்றும் வேல்


தல மகிமை:

சிங்களவர்கள் அதிகம் வாழும் இலங்கை தலைநகர் கொழும்பு மையப்பகுதியில் புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், பழைய கதிர்வேலாயுத சுவாமி கோவில் என்ற இரண்டு சிறப்பு மிக்க முருகப்பெருமான் கோவில்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்டுள்ளன். கதிர்காம கந்தன் கோவிலுக்கு இணையானது என்று பெருமைப்பட சொல்லப்படுகிறது. கி.பி 1839-ல் புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டப்பட்டது.


கதிர்காமத்தில் நடைபெறும் திருவிழா சமயத்தில் கொழும்பு நகரிலும் திருவிழா  நடைபெறும். புதிய கதிர் வேலாயுத சுவாமி கோவில் ஆடிவேல் விழாவின் போது திருத்தேர் கொழும்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வருவது கண் கொள்ளா காட்சி. கொழும்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெற்று வரும் தேரோட்ட விழா என்பது சிறப்பம்சம். இலங்கை தமிழர்கள், சிங்களவர் தவிர கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இருந்தும் பக்தர்கள் வருவது கூடுதல் சிறப்பு.


ஆடிவேல் பூஜை ஆடி மாத பௌர்ணமி நாளில் கதிர்வேலாயுத சுவாமி தேரில் பவனி வருவார் முருகனின் திரு உருவுடன் அவரது வேலும் தேரில் வைத்து பவனி வருவது சிறப்பம்சம். ஆடிவேல் பூஜையின் போது, பழைய கதிர்வேலாயுத சுவாமி மரத்தேரிலும் புதிய கதிர்வேலாயுத சுவாமி வெள்ளித்தேரிலும் பவனி வருவார் . மாசி மகத்தின் போது சென்னை மண்ணடி பவளக்காரத் தெருவில் உள்ள பழைய தண்டாயுதபாணி மற்றும் புதிய தண்டாயுதபாணி வலம் வருவது போல், இங்கும் பழைய புதிய என இரண்டு முருகப்பெருமான் உள்ளனர் . இங்குள்ள வெள்ளித் தேரின் வயது 140.


இந்தத் தேர்த் திருவிழா 1983 வரை தொடர்ந்து மிகவும் கோலாகலமாக நிகழ்த்து வந்தது .கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்சிகளுடன் நிகழும். 1983-ம் ஆண்டு விழாவின் இரவு ஊர்வலத்தில் ஏற்பட்ட இனக் கலவரத்திற்கு பின் இந்த விழா நடைபெறவில்லை. வெள்ளி தேர் பத்திரப்படுத்தப்பட்டது. இவ்விழா 1993, 2002, 2004, 2010 ஆண்டுகளில் நடைபெற்றது. பின் 2012-ற்கு பின் இவ்விழா இலங்கையின் தேசிய விழாவாக அறிவிக்கப்பட்டு. நிகழ்ந்துவருகிறது. 


தலவரலாறு:

தமிழகத்தின் செட்டி நாட்டிலிருந்து 1790-ம் ஆண்டு வணிகம் செய்ய இலங்கைக்கு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் தங்களது சொந்தச் செலவில் இலங்கை நாட்டில் பல நகரங்களில் கோவில்களைக் கட்டி நிர்வகித்து வந்தார்கள். கொழும்பு, காலி, கதிர்காமம், கண்டி, திருகோணமலை, மாத்தளை, யாழ்ப்பாணம், கம்பளை, இரத்தினபுரி, குருணாகல், புசல்லாவை, நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, மாதம்பை, புத்தளம் ஆகிய நகரங்களில் கோவில்களை அமைத்தார்கள்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கதிர்காமக் கந்தன் ஆலய உற்சவத்திற்காகக் கொழும்பிலிருந்து வருடா வருடம் யாத்திரை சென்று வந்தார்கள்.


1874-ம் ஆண்டு காலரா நோய் பரவியதன் காரணமாக கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை செல்வதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடுத்துவிட்டனர். இதனால் அந்த ஆண்டு பழைய கதிரேசன் ஆலயத்தில் கதிர்காமக் கந்தன் உற்சவத்தை நடத்தத் தீர்மானித்தார்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார். இதுதான் கொழும்பில் ஆடிவேல் பிறந்த வரலாறு. பின்னர் கொழும்பு செட்டியார் தெருவில் 1939-ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட புதிய கதிரேசன் ஆலயம், முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துடன் இணைந்து ஆடிவேல் விழாவினை நடத்துகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர். ஆயிரம் பேர் ஒரே சமயத்தில் உட்கார்ந்து உண்ணக் கூடியவகையில், சகல வசதிகளையும்கொண்ட கல்யாண மண்டபம் ஒன்றினையும் புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் கட்டி முடித்தனர்.


தல அமைப்பு:

கலைநயத்துடன் கட்டப்பட்ட திருக்கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் கதிர்வேலாயுத சுவாமி என்ற திருப்பெயருடன் காட்சி தந்து அருள்பாலிக்கின்ரார். இலங்கையின் மற்ற கோவில்களைப் பொலவே, முருகபெருமானின் வேலிற்கும் இங்கு சிறப்பு. சுவாமி திருவிழாக்களில் வீதி உலா வரும்போது முருகனி வேலும் மையமாக வீற்றிருக்கும். கோவிலில் அனைத்து உபதெய்வங்களும் குடியிருந்த் அருள்கின்றனர்.  


புதிய கதிர்வேலாயுதசுவாமி கோவிலின் உட்சுவர்களிலே, புராண நிகழ்வுகளைச் சித்தரிக்கும் வண்ணப்படங்கள் தீட்டப்பட்டுள்ளன. வெளிவீதியில் வெறுங்காலுடன் கோவிலைச் சுற்றி வலம் வந்து வழிபட ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.


திருவிழா:

ஆடிவேல் பெருவிழா, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்,  


பிரார்த்தனை:

இகபர சௌபாக்கியங்கள் வேண்டி, அமைதி நிலைத்திட, தீவினைகள் அகன்றிட, நினைத்தது நடந்தேற


நேர்த்திக்கடன்:

காவடிகள், கரகம், அன்னதானம், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 5.30-10.30 மாலை 5.30-8


உலக அமைதி வேண்டி இலங்கை கொழும்பு பம்பலப்பட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமியை அனைவரும் மனமொன்றி தொழுடிவோம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏    



படம் 1 - இகபர சௌபாக்கியங்கள் தந்தருளும் இலங்கை கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி


படம் 2 - நினைத்ததை நடத்தி தரும் இலங்கை கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமிக்கு நேர்த்திக்கடன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்