கோவில் 347 - இந்தோனேசியா பண்டா ஆச்சே பழனி ஆண்டவர் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-347
தீராத நோய்களை தீர்க்கும் இந்தோனேசியா பண்டா ஆச்சே பழனி ஆண்டவர் கோவில்
21.5.22 சனி
அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்
குட ராஜா (Kuta Raja)
பண்டா ஆச்சே (Banda Aceh),
இந்தோனேசியா (Indonesia)
மூலவர்: பழனி ஆண்டவர்
தோற்றம்: 1934
தல மகிமை:
முஸ்லிம் நண்பர்கள் உட்பட அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் வருகை தந்து வேண்டி பலன் பெறும் பிரசித்தி பெற்ற பழனி ஆண்டவர் திருக்கோவில் இந்தோனேசியா நாட்டில் பண்டா ஆச்சே பகுதியில் அமைந்துள்ளது. மசூதிகள் நிறைந்த இஸ்லாம் நாட்டில் இந்து கோவில் இருப்பதை அனைவரும் கண்டு ஆச்சரியபடுகின்றனர்.
பங்குனி உத்திரம் திருவிழா இத்திருத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதிக அளவில் முருக பக்தர்கள் அலகுகள் குத்தியும், வித விதமான காவடிகள் சுமந்தும் தங்களது நேர்த்திக்கடனை பழனி ஆண்டவருக்கு செலுத்திகின்றனர். மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்தும் முருகப்பெருமானின் அதி தீவிர பக்தர்கள் பங்குனி உத்திர பெருவிழாவில் கலந்து கொள்கின்றனர் என்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சம். தைப்பூசத் திருவிழாவும் காவடிகள் முதலான நேர்த்திக்கடன்களுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.
தலவரலாறு:
இங்கு குடியேறிய தமிழர்கள் 1934-ல் தமிழ் கடவுளான கந்தப்பெருமானுக்கு, பழனி ஆண்டவர் ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தினர். இந்தோனேசியா நாட்டில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் பேரழிவு ஏற்பட்ட போது, இந்த திருக்கோவிலும் பெருத்த சேதமடைந்தது என்பது வருத்தமான செய்தி. இருப்பினும் முருகப்பெருமானின் பேரருளால், பழனி ஆண்டவர் திருக்கோவில் மீண்டும் ஏப்ரல் 2012-ல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தல அமைப்பு:
தமிழகத்துக் கோவில்களைப் போலவே அழகிய கலைநயத்துடன் கட்டப்பட்ட இத்திருக்கோவிலின் கருவறையில், முருகப்பெருமான் பழனி ஆண்டவர் என்ற திருப்பெயருடன் பக்தர்களுக்கு காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மயில் பீடமும் உள்ளது. மேலும் விநாயகப்பெருமான், சிவப்பெருமான் முதலான தெய்வங்களும் வீற்றிருந்து அருளுகின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம்,
பிரார்த்தனை:
தீராத நோய்கள் தீர, மத நல்லிண்ணகம் ஏற்பட,
நேர்த்திக்கடன்:
அலகு குத்துதல், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6 முதல் 6 வரை
மத நல்லிண்ணக்கத்தை ஏற்படுத்தும் இந்தோனேசியா பண்டா ஆச்சே பழனி ஆண்டவரை பணிந்து வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - தீராத நோய்களை தீர்க்கும் இந்தோனேசியா பண்டா ஆச்சே பழனி ஆண்டவர்
படம் 2 - மத நல்லிண்ணக்கத்தை ஏற்படுத்தும் இந்தோனேசியா பண்டா ஆச்சே பழனி ஆண்டவர் கோவில்
Comments
Post a Comment