கோவில் 346 - இந்தோனேசியா சுமத்ரா மேடன் சுப்பிரமணியம் நகரத்தார் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-346
ஏற்றம் தரும் இந்தோனேசியா சுமத்ரா மேடன் சுப்பிரமணியம் நகரத்தார் கோவில்
20.5.22 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணியம் நகரத்தார் திருக்கோவில்
மேடன் (Maden)
சுமத்ரா 20112 (Sumatra 20112),
இந்தோனேசியா (Indonesia)
மூலவர்: சுப்பிரமணியம்
பழமை: 1892 (130 ஆண்டுகள்)
தல மகிமை:
இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா தீவில் மேடன் நகரில், கடல் கடந்து வணிகம் செய்த செட்டியார்கள் எழுப்பிய திருக்கோவிலே, சுப்பிரமணியம் நகரத்தார் திருக்கோவில் என்பது சிறப்பமசம். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிகத்தில் கட்டிய கோவில்களை போலவே, இங்கும் பிரம்மாண்டமாக முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் மிகுந்த கலைநயத்துடனும், பெரிய தூண்களுடனும் எழுப்பப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். முஸ்லிம் சமுதாயத்தினரும் வழிபடுகின்ற கோவில் என்பது சிறப்பம்சம்
தலவரலாறு:
இந்தோனேசியா நாட்டிற்கு வாணிபம் செய்ய குடியேறிய சீரிய முருகப்பெருமான் பக்தர்களான நகரத்தார்கள் ஒருங்கிணந்து 1892-ல் சுப்பிரமணியம் நகரத்தார் திருக்கோவிலை கட்டினார்கள். இந்தோனேசியா நாட்டில் இக்கோவில் இரண்டாவது பழமையான இந்துக் கோவிலாகும். பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவிலே மிகவும் பழமையானதாகும்.
தல அமைப்பு:
அழகான கோபுரத்துடன் கூடிய திருக்கோவிலின் கருவறையில் முருகப்பெருமான், சுப்பிரமணியர் என்ற திருப்பெயருடன் பொலிவுடன் காட்சி தந்து பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு வலப்புற சந்நிதியில் விநாயகப்பெருமானும், இடப்புற சந்நிதியில் மகா விஷ்ணுவும் வீற்றிருந்து அருளுகின்றனர். வேலவனின் சக்தி மிகுந்த வேல் தனி சந்நிதியில் இருப்பது சிறப்பு. சிவகாமி சமேத நடராஜப்பெருமான் ஆடல் வடிவில் எழுந்தருளியுள்ளார். சண்டிகேஸ்வரர் தனி சந்நிதியில் அருளுகின்றார். சமயக்குரவர் நால்வரின் உருவப்படங்கள் இருப்பதும் சிறப்பு.
திருவிழா:
தைப்பூசம், திருக்கார்த்திகை, தைப்பொங்கல், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி
பிரார்த்தனை:
ஏற்றம் தர வேண்டி, எண்ணிய எண்ணங்கள் நிறைவேற, நேர்மறை குணங்கள் அதிகரிக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11.30 மாலை 5-8.30 வரை
நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் இந்தோனேசியா மேடன் சுப்பிரமணியரை மனக்கண்ணால் தரிசித்து பயன்பெறிடலாம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - ஏற்றம் தரும் இந்தோனேசியா சுமத்ரா மேடன் சுப்பிரமணியர்
படம் 2 - நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் இந்தோனேசியா மேடன் சுப்பிரமணியம் திருக்கோவில்
Comments
Post a Comment