கோவில் 349 - இலங்கை இணுவில் கந்தசுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-349

இன்னல்கள் தீர்த்தருளும் இலங்கை இணுவில் கந்தசுவாமி கோவில்

23.5.22 திங்கள்

அருள்மிகு கபிலவனம் கந்தசுவாமி திருக்கோவில்

இணுவில்

யாழ்ப்பாணம்

இலங்கை

இருப்பிடம்: யாழ்ப்பாணத்திற்கு வடக்கே 5 மைல்


மூலவர்: கந்தசுவாமி

தல விருட்சம்: நொச்சி

தலத்தீர்த்தம்: கோவில் கிணறு


தல மகிமை:

இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இணுவில் என்ற ஊரில் அமைந்துள்ள உள்ள இணுவில் கந்தசுவாமி கோவில்  வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களிலே  முக்கியமான ஒன்று. ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது


இக்கோவிலில் 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பெருந்திருவிழா ஆண்டுக்கு ஒருமுறை இடம் பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசையன்று தீர்த்தத் திருவிழா இடம்பெறுவது விழாவின் சிறப்பமசம்.. ஆனி அமாவாசைக்கு முந்தைய வளர்பிறை சஷ்டியன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இத்திருவிழா, 25-ம் நாளில் ஆனி அமாவாசையன்று தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும். ஒவ்வொரு நாளிலும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார். 


கந்த சஷ்டி ஆறு நாட்களும் திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தபுராணத்தின் சூரபத்மன் வதைப் படலத்தை ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது சூரன் போர்த் திருவிழா எனப்படும். தைப்பூசத் திருவிழாவில் உலகப்பெரு மஞ்சம் [சுவாமி தேர் உலா] எனப்படும் மஞ்சத் திருவிழா நூற்றாண்டை கடந்தும் ஒவ்வொரு ஆண்டும் நடப்பது சிறப்பு.


தலவரலாறு:

யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் தொடக்கத்தில் இணுவில் பகுதியின் ஆட்சியாளராகப் பேராயிரவன் என்பவர் நியமிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவரது வழி வந்த கனகராச முதலி என்பவர் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவராக விளங்கினார். இவர் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோவில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் முருக வழிபாடு தோன்றியது குறித்த கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகிறது.


1661-ல் வேலாயுதர் என்பவர் இதே இடத்தில் முருகனை வைத்து வணங்கி வந்ததார் என்று தெரிகிறது. அவர் வழி வந்தவர்களால் சிறிய கோவில் எழுப்ப்ப்பட்டது. 1891-ம் ஆண்டில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக்கோவில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோவிலுக்காக மஞ்ச வாகனம் [தேர்] ஒன்றைச் செய்யும் பணிகள் 1910-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் [உலக தேர்] என மகான்களால் குறிப்பிடப்படும் இந்த புகழ் பெற்ற மஞ்சம் 1912-ம் ஆண்டில் வெள்ளோட்டம் நிகழ்த்தப்பட்டது. அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோவிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது. 1946-ம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1953-ம் ஆண்டில் நீதிமன்றத் தீர்ப்பின் படி இக்கோவில் பொதுக் கோவிலாக அறிவிக்கப்பட்டது.  1967-ல் கருவறைக்கு இரண்டு தளங்களைக் கொண்ட விமானம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.. 1976-ம் ஆண்டில் ஒரு புதிய சித்திரத் தேரும், 1977-ல் புதிய சப்பரமும் இக் கோவிலுக்காக உருவாயின. 


தல அமைப்பு:

அழகிய கோபுரமுடைய திருக்கோவில் கருபவறையில் ஞான பண்டிதன் கந்தசுவாமியாக ஆறுமுகங்ளுடன் காட்சியருளி பக்தர்களுக்கும், ஞானிகளுக்கும் அருள்பாலிக்கின்றார். கோவில் கிணற்று தீர்த்தம்  சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுகிறது. மேலும் வேண்டி வரும் பக்தர்கள் முர்கப்பெருமானை வணங்கி, இந்நீரைப் பருகினால், தீராத நோய்கள் தீரும். எல்லா நலன்களும் உண்டாகும். குழந்தப்பேறு கிட்டும். மேலும் அருகில் 3 விநாயகர் கோவில், சிவகாமி அம்மன் கோவில், சிவப்பெருமான் கோவில் உள்ளது.  


திருவிழா:

ஆனி அமாவாசை பெருவிழா (25 நாள்), கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்,  வைகாசி விசாகம், பிரதி சஷ்டி, கார்த்திகை, சதுர்த்தி 


பிரார்த்தனை:

தீராத நோய்கள் தீர, இன்னல்கள் அகல, குழந்தைப்பேறு 


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 5-12 மாலை 5-8


இலங்கை இணுவில் கந்தசுவாமி மனக்கண்ணால் வேண்டிக்கொண்டால் தீராத நோய்களையும் தீர்த்து வைப்பார்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - இன்னல்கள் தீர்த்தருளும் இலங்கை இணுவில் கந்தசுவாமி



படம் 2 - தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் இலங்கை இணுவில் கந்தசுவாமியின் தேர்த்திருவிழா


Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்