கோவில் 387 - மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-387

சக்தியை தந்தருளும் மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில் 

30.6.2022 வியாழன்

அருள்மிகு பூங்கா முருகன் திருக்கோவில்

தல்லாகுளம்

ராஜாஜி பார்க்  

மதுரை-625020

இருப்பிடம்: மதுரை-கோவில் 4 கிமீ


மூலவர்: பூங்கா முருகன் 


தலமகிமை:

மதுரை மாநகரின் மையத்தில் 4.5 தொலைவில் உள்ள தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் புடை சூழ அழகிய தோற்றத்தில் பூங்கா முருகன் கோவில் உள்ளது. நகரத்தினுள் இருப்பதால், கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பது சிறப்பு.


முருகனுக்குரிய விசேஷ நாட்களில் அலங்காரம் அர்ச்சனைகள் நடைபெறுவது சிறப்பு. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேக அலங்காரம் சிறப்பாக நடிப்றும். பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தன்று வடை மாலை சென்று சாத்துதல் சிறப்பம்சம். அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகிறது,


தல வரலாறு:

சுமார் 50 வருட சிறப்பு மிக்க பழமையான கோவில் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.


தல அமைப்பு:

திருக்கோவில் ராஜகோபுரம் உள்ளே நுழைந்து உடன் கம்பீரமான கொடிமரம் உள்ள்து. அடுத்து வீநாயகர் அருள்கிறார். அடுத்து கருவறையில் முருகப்பெருமான், பூங்கா முருகன் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான் விசேஷ நாட்களில் ராஜ அலங்காரத்தில் பவனி வருவது கோடி அழகு. பக்தர்கள் கேட்பனவற்றை எல்லாம் முருகப்பெருமான் அள்ளி வழங்குகிறார்.


மேலும் சிவபெருமான் நந்தி, பராசக்தி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சரஸ்வதி, ஆஞ்சநேயர்,  அய்யனார், நாகர், சனி, நவக்கிரகங்கள் அருளுவது சிறப்பு. ராகு கால நேரங்களில் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால் சிறப்பாக நடைபெறும். அடுத்து கால பைரவர் மற்றும் ராஜ வீரபத்ரன் அருள்வது சிறப்பு. வளர்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால், அனைத்து நலன்களும் வந்து சேரும்.                                                                                                                                                                                                                           


திருவிழா:

கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம்,  பிரதி செவாய், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை


பிரார்த்தனை:

சக்தி பெற, கேட்பன எல்லாம் பெற, நோய்கள் அகல, தோஷம் நீங்க, திருமண வரம்


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துல்


திறக்கும் நேரம்:

காலை 6-12 முதல் மாலை 5-9 வரை


மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் வேண்டி வணங்கினால், கேட்டவற்றை அள்ளி வழங்குவார்!  


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - சக்தியை தந்தருளும் மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன்


படம் 2 - கேட்டவற்றை அள்ளி வழங்கும் மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில்


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்