கோவில் 206 - கேரளா சங்கனாச்சேரி பெருன்னா சுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏 மறு பதிவு தினம் ஒரு முருகன் ஆலயம்-206 முருகப்பெருமானின் வேல் தலைகீழாக இருக்கும் கேரளா சங்கனாச்சேரி பெருன்னா சுப்ரமணிய சுவாமி கோவில் 31.12.21 வெள்ளி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பெருன்னா-686102 சங்கனாச்சேரி கோட்டயம் மாவட்டம் கேரளா இருப்பிடம்: கோட்டயத்திலிருந்து 21 கிமீ, சங்கனாச்சேரியிலிருந்து.3 கிமீ மூலவர்: சுப்ரமணிய சுவாமி தலமகிமை: கேரள மாநிலத்தில் இரண்டு சிறப்பு மிக்க முருகப்பெருமான் கோவில்களில் முருகனின் கூரிய வேல் தலைகீழாக பிடிக்கப்பட்டிருக்கும். அதில் முதலாவது, 1200 ஆண்டுகள் பழமையான சங்கனாச்சேரி பெருன்னா சுப்ரமணிய சுவாமி கோவில். இத்திருத்தலத்தில், முருகப்பெருமான் தனது வேலை தலைகீழாக பிடித்து இருப்பார். இவ்வாலயம், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ள பெருன்னா என்ற ஊரில் அமைந்துள்ளது. மற்றொரு கோவிலான நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் வேல் தலைகீழாக இருக்கும். புராணங்களில், மதுரை மாநகரை ஆ