கோவில் 566 - திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-566
சிறப்பான வாழ்வு தரும் திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில்
26.12.2022 திங்கள்
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில்
திருப்பத்தூர்-635601
திருப்பத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பத்தூர் 500 மீ
மூலவர்: முத்துக்குமாரசுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
பழமை: 18-ம் நூற்றாண்டு
தலமகிமை:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிறப்பான வாழ்வு தரும் திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலா அன்னம், சிம்மம், பூதம், நாகம், வழியில், யானை ஆகிய வாகனங்களில் திருவீதி உலா வருவார். பின்னர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். முத்துக்குமாரசாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டு தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பர்.
பங்குனி பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். திருநாளன்று சிதம்பரேஸ்வரர், சிவகாமியம்பாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.
தல வரலாறு:
இக்கோவில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறது வரலாறு.
தல அமைப்பு:
இக்கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவில் கருவறையில் முத்துக்குமாரசுவாமி பொலிவுடன் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் விநாயகர், சிதம்பரேஸ்வரர், சிவகாமியம்பாள் . தனி சந்நிதிகளில் அருளகின்றனர் இங்குக் சிறப்பு மிக்க கோவில் தேர் உள்ளது.
திருவிழா:
வைகாசி விசாகம், பங்குனி உத்தரம், தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, நவராத்திரி, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
சிறப்பான வாழ்வு வேண்டி, நினைத்தது நிறைவேற,
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நினைத்ததை நிறைவேற்றும் திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமியை கும்பிட்டு மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 566 சிறப்பான வாழ்வு தரும் திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில்
படம் 2 - 566 நினைத்தது நிறைவேற்றும் திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி
Comments
Post a Comment