கோவில் 203 - கேரளா நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-203
வேலை தலைகீழாக பிடிக்கும் கேரளா நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவில்
28.12.21 செவ்வாய்
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
நீண்டூர்-678551
கோட்டயம் மாவட்டம்
கேரளா மாநிலம்
இருப்பிடம்: கோட்டயத்திலிருந்து 13 கிமீ
மூலவர்: சுப்ரமணிய சுவாமி
தலமகிமை:
கேரள மாநிலத்தில் இரண்டு சிறப்பு மிக்க முருகப்பெருமான் கோவில்களில் முருகனின் கூரிய வேல் தலைகீழாக பிடிக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றான நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் வேல் தலைகீழாக இருக்கும். இக்கோவில் மிகவும் பழமையானக் கோவில். இது அந்த இடத்திற்கு பெருமையையும் புகழையும் கொண்டு வந்துள்ளது. இக்கோவில் கேரள கட்டிடக்கலை பாணியில் லேட்டரைட் கற்கள், டெரக்கோட்டா ஓடுகள், தேக்கு மரங்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் அமைப்பு முழுவதும் மர வேலைப்பாடுகள் உள்ளன. பார்ப்பதற்கு மிக அழகு.
தலபுராணம்:
மிகவும் பழமையான இத்திருத்தலத்தில் பாண்டவர்களும் வியாச முனிவரும் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
தல அமைப்பு:
கோவிலின் முன்புறம் ஒற்றைக்கல் செதுக்கப்பட்ட தீபஸ்தம்பம் உள்ளது. கருவறையில் சுப்ரமணிய சுவாமி உக்கிரமான வடிவில் முருக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். தாராகாசூரனுடன் போரிட்டதால் முருகன் கோபம் மற்றும் சீற்றமான மனநிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. முருகப்பெருமானின் கையிலுள்ள கூரான வேல் கீழ்நோக்கி குத்தப்பட்டிருப்பது சிறப்பு. முருகன் இங்கு புனிதப்படைகளின் தலைவரான தேவசேனாபதியின் வடிவில் வழிபடப்படுகிறார். செவ்வாய்கிழமை முருகனை வழிபடும் முக்கிய நாளாகும். ஒட்டனரங்கமாலா சமர்ப்பணம் என்ற மிகப்பழமையான சிறப்பு வழிபாடு இக்கோவிலின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகும்.
மகா கணபதி, தட்சிணாமூர்த்தி, பகவதி, துர்க்கை, சதாவு, நாகராஜா ஆகிய தெய்வங்களும் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஏப்ரல்/மே திருவிழா (6 நாள்-மேட சஷ்டி நாளில் ஆராட்டு விழா), பிரதி செவ்வாய் விசேஷ வழிபாடு
பிரார்த்தனை:
புதிய முயற்சிகள் வெற்றி பெற, அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், விசேஷ அர்ச்சனை, அலங்காரம், பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 5-10 மாலை 5.30-7.30
புதிய முயற்சிகள் வெற்றியடைய செவ்வாயன்று செவ்வேள் கேரளா நீண்டூர் சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - வேலை கையில் தலைகீழாக பிடித்துக்கொண்டு அருளும் கேரளா நீண்டூர் சுப்ரமணிய சுவாமி
படம் 2 - புதிய முயற்சிகள் வெற்றியடைய செய்யும் கேரளா நீண்டூர் சுப்ரமணிய சுவாமி
Comments
Post a Comment