கோவில் 567 - சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்த பாலமுருகன் கோவில்

 🙏🏼🙏🏼                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-567

செல்வம் சேர அருளும் சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்த பாலமுருகன் கோவில்

26.12.2022 செவ்வாய்

அருள்மிகு ஆனந்த பாலமுருகன் திருக்கோவில்

கிழக்கு தாம்பரம்

சென்னை-600059

இருப்பிடம்: தாம்பரம் 1 கிமீ, சென்னை சென்ட்ரல்/எக்மோர்/கோயம்பேடு 29 கிமீ


மூலவர்: ஆனந்த பாலமுருகன்

உற்சவர்: ஆனந்த பாலமுருகன்


தலமகிமை:

சென்னை மாநகரம் சென்னை சென்ட்ரல்/எக்மோர்/கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிழக்கு தாம்பரத்தில் செல்வம் சேர அருளும் சென்னை தாம்பரம் ஆனந்த பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த சிறியக் கோவிலில் தல நாயகனாக முருகப்பெருமான், ஆனந்த பாலமுருகன் என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கின்றார்.

முருகப்பெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. 

 

தல வரலாறு:

கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த புரவலர்கள் மற்றும் முருக பக்தர்களால் இத்திருக்கோவில் கட்டப்பட்டது.


தல அமைப்பு:

கருவறையில் மூலவராக ஆனந்த பாலமுருகன் வீற்றிருந்து பக்தர்களுக்க் அருள்பாலிக்கின்றார். உற்சவர் பொலிவுடன் அருள்கின்றார். மேலும் விநாயகர் முதலான  தெய்வங்களும் வீற்றிருந்து அருள்கின்றனர்.   


திருவிழா:

பங்குனி உத்தரம், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

செல்வம் சேர, வேண்டுதல் நிறைவேற, மன அமைதி, ஆன்மீக உணர்வு அதிகரிக்க் 


நேர்த்திக்கடன்: 

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்



வேண்டுதல் நிறைவேற அருளும் சென்னை திருவல்லிக்கேணி கிழக்கு தாம்பரம் ஆனந்த பாலமுருகனை போற்றி வணங்குவோம்! 


வேலும் மயிலும் துணை! 

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏼🙏🏼


படம் 1 - 567 செல்வம் சேர அருளும் சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்த பாலமுருகன்


படம் 2 - 567 சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி அருளும் சென்னை கிழக்கு தாம்பரம் ஆனந்த பாலமுருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்