கோவில் 570 - திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏼🙏🏼                                                                                                                                                                               தினம் ஒரு முருகன் ஆலயம்-570

நேர்மறை ஆற்றலை அதிகரிக்க அருளும் திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில்

30.12.2022 வெள்ளி

அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி.திருக்கோவில்

கண்ணபிரான் காலனி

வாலிபாளையம் 

திருப்பூர்-638402

திருப்பூர் மாவட்டம்

இருப்பிடம்: திருப்பூர் 1 கிமீ


மூலவர்: கல்யாண சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

திருப்பூர் மாநகரிலிருந்து 1 கிமீ தொலைவில் வாலிபாளையம் எனும் ஊரில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க அருளும் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான், கல்யாண சுப்பிரமணிய சுவாமியாக வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி அருள்கின்றார். 


கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் மற்றும், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் விரதம் இருந்து பங்குனி உத்திர விழாவில் பங்கேற்று, முருகப்பெருமானை வழிபடுவர். கந்த சஷ்டி திருவிழாவும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் முடிந்து மறுநாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுப்பிரமணிய சுவாமியை கல்யாண கோலத்தில் தரிசிக்கின்றனர். 


தல வரலாறு:

இக்கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 2014-ல் திருப்பணி செய்யப்பட்டு ராஜகோபுரம், மூலவர் விமானம், பரிவார மூர்த்திகள் சந்நிதிகள், கோபுரங்கள், முன்மண்டபம் கட்டப்பட்டன. கோவில் கும்பாபிஷேகம் 26.1.2015-ல் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

இந்த பழமையான திருக்கோவில் கருவறையில் மூலவரான கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் வடக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், நவக்கிரகங்கள் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். 


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்தரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டி, மன அமைதி பெற 


நேர்த்திக்கடன்: 

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 9 முதல் மாலை 5 வரை


திருமண வரம் தந்தருளும் திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணிய சுவாமியை திருப்பாதங்கள் பணிந்து வணங்கிடுவோம்! 


வேலும் மயிலும் துணை! 

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏼🙏🏼



படம் 1 - 570 திருமண வரம் தந்தருளும் திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - 570 நேர்மறை ஆற்றலை அதிகரிக்க அருளும் திருப்பூர் வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்