Posts

Showing posts from November, 2022

கோவில் 541 - மதுரை திருமங்கலம் குமரன் கோவில்

 🙏🙏            தினம் ஒரு முருகன் ஆலயம்-541 திருமண பாக்கியம் அருளும் மதுரை திருமங்கலம் குமரன் கோவில் 1.12.2022 வியாழன் அருள்மிகு குமரன் திருக்கோவில் திருமங்கலம்-625706  மதுரை மாவட்டம்  இருப்பிடம்: மதுரை 25 கிமீ, திருமங்கலம் பேருந்து நிலையம் 1.2 கிமீ மூலவர்: குமரன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: தெய்வானை நாதர் தல விருட்சம்: வில்வ மரம் தீர்த்தம்: குண்டாறு புராணப்பெயர்: திருமாங்கல்யபுரம்  தலமகிமை: .மதுரை-விருதுநகர் சாலையில் 25 கிமீ தொலைவில் குண்டாறு நதிக்கரையில் திருமண பாக்கியம் அருளும் திருமங்கலம் குமரன் கோவில் அமைந்துள்ளது. திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் தூரம் 1.2 கிமீ ஆகும். கோவிலுக்கு அருகில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோவில் மற்றும் காட்டு பத்திரகாளி அம்மன் கோவில்கள் இருப்பது சிறப்பு. இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது. சிறப்பு மிக்க சூரசம்ஹார நிகழ்வினை காண ஏராளமான பக்தர்கள் கலந்து குமரன் அருளை பெற்று செல்கின்றனர். இது போல திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று சொக்கப்பனை கொளுத்துதல் மிகப் பெரிய விழாவாகும், கிருத்திகை மற்

கோவில் 174 - திருச்சி உறையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-174 பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கின்ற திருச்சி உறையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 29.11.21 திங்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  உறையூர்  திருச்சி-620003 இருப்பிடம்: திருச்சி பேருந்துநிலையம்-உறையூர் பாளையம் பஜார் கோவில் 2 கிமீ  மூலவர்: சுப்பிரமணிய சுவாமி  தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 500 ஆண்டுகள் தலமகிமை: திருச்சி மாநகரிலேயே இந்த சக்தி வாய்ந்த முருகன் கோவில் இருப்பது மிகச்சிறப்பு. இத்திருத்தலதில் வந்து மனமுருக பிரார்த்தித்தால் பிரிந்த தம்பதியனர் ஒன்று சேருவர். கணவன் மனைவி மனமொற்றுமை ஓங்கும். மனம் நிம்மதி பெறும், நாக தோஷங்கள் விலகும்.  இவ்வாலய மண்டப உச்சியில் அஷ்டலட்சுமி சிற்பங்கள் மிக அழகு.  வடநாட்டில் 16 வகையான திருக்கோலங்களில் லட்சுமியை வழிபடுகிறார்கள். தமிழ்நாட்டில் எட்டு வகையான திருக்கோலங்கள். அனைத்து வளங்களையும் தருபவள் ஆதிலட்சுமி. பசுமையும் பயிர்களும் செழிக்க வைப்பவள் தான

கோவில் 540 - திருவனந்தபுரம் இடபழஞ்சி (இடபழனி) பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏  தினம் ஒரு முருகன் ஆலயம்-540 சிறுவர்கள் தோஷம் நீக்கும் திருவனந்தபுரம் இடபழஞ்சி (இடபழனி) பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 30.11.2022 செவ்வாய் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இடபழஞ்சி (இடபழனி)-695010 திருவனந்தபுரம்-695010 கேரளா மாநிலம் இருப்பிடம்: திருவனந்தபுரம் பேருந்து நிலையம்/ரயில் நிலையம் 5 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி தலமகிமை: திருவனந்தபுரம் பேருந்து நிலையம்/ரயில் நிலையத்திலிருந்து சொச்சார் சாலயில் 5 கிமீ தொலைவில் சிறுவர்கள் தோஷம் நீக்கும் திருவனந்தபுரம் இடபழஞ்சி கிள்ளியாற்றின் கரையில் சிறப்பு மிக்க பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இடபழனி என்று சிறப்பு பெயரில் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கின்றார். கேரள முறைப்படி ஆண்கள் சட்டை அணியாமல்தான் முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். வாழை இலையில் வீபூதியுடன் முருகனுக்கு பிடித்தமான சந்தன பிராசத்தை பக்தர்கள் பக்தியோடு வாங்கி நெற்றியில் அணிந்து கொள்கிறார்கள். இதன் முருகப்பெருமான் மூலம் அனைத்து நலன்களும் அருளுகின்றார் என்பது ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் போக

கோவில் 173 - திருநெல்வேலி மாவட்டம் கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🙏                                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-173 மருத்துவ குணம் மிக்க மூலிகைகள் நிறைந்த திருநெல்வேலி மாவட்டம் கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியர் கோவில் 28.11.21 ஞாயிறு அருள்மிகு கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியர் திருக்கோவில்  சேரன்மகாதேவி  திருநெல்வேலி மாவட்டம்  இருப்பிடம்: திருநெல்வேலி-சேரன்மகாதேவி 19 கிமீ, சேரன்மகாதேவி-களக்காடு சாலையில் 2 கிமீ-ல் கோவில் மூலவர்: பாலசுப்பிரமணியர்  தீர்த்தம்: இளநீர் தீர்த்தம் தலமகிமை: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகில் தென்றலின் பிறப்பிடமான கொழுந்துமாமலை அடிவாரத்தில், முருகப்பெருமான் குழந்தை வடிவத்தில் பாலசுப்பிரமணியராகத் திகழ்கிறார். குழந்தையில்லாதவர்களின் குறை தீர்க்கும் வள்ளலாக அருள்பாலிக்கின்ற தலம் இது. இம்மலை அனுமன் ஏந்திய சஞ்சீவி மலையின் சிதறிய ஒரு பகுதி என்பதால் மூலிகைகள் நிறைந்தது. எனவே தீராத நோய்களை தீர்க்கின்ற மருத்துவ குணம் கொண்ட முருகப்பெருமானின் தலம்.  கோவிலின் வடகிழக்கு மூலையில் சிறிய கிணறு

கோவில் 539 - கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன் கோவில்

 🙏🙏   தினம் ஒரு முருகன் ஆலயம்-539 இன்பங்கள் அருளும் கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன் கோவில் 29.11.2022 திங்கள் அருள்மிகு அருள் முருகன் திருக்கோவில் இந்திலி-606202  கள்ளக்குறிச்சி வட்டம்  கள்ளக்குறிச்சி மாவட்டம் இருப்பிடம்: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் 7 கிமீ மூலவர்: அருள் முருகன் (பாலமுருகன்) தல விருட்சம்: வன்னி மரம் தீர்த்தம்: வைகை தீர்த்தகுளம் தலமகிமை: கள்ளக்குறிச்சி-சேலம் நெடுஞ்சாலையில் 7 கிமீ தொலைவில் இன்பங்கள் அருளும் கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன் கோவில் அமைந்துள்ளது. திருமணத்தடை பிள்ளைப்பேறு கிட்ட, தொழில் மேம்பாடு அடைய மற்றும் உடல்நலம் சீராக செவ்வாய், வெள்ளிகளில் இவருக்கு அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றுகிறார்கள். இப்படிச் செய்வதால், அல்லல்கள் நீங்கி ஆனந்த வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.  பங்குனி உத்திரம் 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. திருத்தேர் விழா முதன்மைப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஏழு நாட்கள் தொடர்ந்து திருவீதி உலா, அடுத்து பங்குனி உத்திரத்தன்று காலை விநாயகர் பூஜை, முருகன் பூஜை,

கோவில் 172 - சென்னை மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-172 சகோதரர்கள் உரசல்களை நீக்கி ஒற்றுமையுடன் வாழ அருளும் சென்னை மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில் 27.11.21 சனி அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்  மேற்கு சைதாப்பேட்டை  சென்னை-600015  இருப்பிடம்: கோயம்பேடு/சென்னை சென்ட்ரல்/எழும்பூர் - சுமார் 10 கிமீ மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி  உற்சவர்: தேவியருடன் முருகப்பெருமான் தலமகிமை: சென்னை மாநகரின் மையப்பகுதியான மேற்கு சைதாப்பேட்டையில் சிவசுப்ரமணிய சுவாமி பக்தர்கள் தங்களது சகோதர பகை நீங்க,  வீடு, நிலப்பிரச்சனைகள் நீங்க, திருமணத் தடைகள் நீங்க வழிபட்டு செல்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் உப்பு மிளகு காணிக்கை செலுத்தியும், வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தும், அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.  செங்குந்தர் சமூகத்தவரால் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஆலயம். இன்று வரை அ

கோவில் 538 - கோயம்புத்தூர் கணபதி மாநகர் பாலமுருகன் கோவில்

Image
 🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-538 வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றி தரும் கோயம்புத்தூர் கணபதி மாநகர் பாலமுருகன் கோவில் 28.11.2022 ஞாயிறு அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் 4th Block கணபதி மாநகர்  கோயம்புத்தூர்-641006  கோயம்புத்தூர் மாவட்டம் இருப்பிடம்: காந்திபுரம் பேருந்து நிலையம் 6 கிமீ மூலவர்: பாலமுருகன் தலமகிமை: கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சத்தி சாலையில் 6 கிமீ தொலைவில் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றி தரும் பிரசித்தி பெற்ற கணபதி மாநகர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் சக்தி வாய்ந்த முருகப்பெருமானுடன் அண்ணாமலையாரும், நாராயணரும் சேர்ந்து அருளுவது சிறப்பம்சமாகும்.  பக்தர்கள் தங்களுக்கு தேவையானதை வேண்டி 48 நாட்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால், இத்தல முருகப்பெருமான் வேண்டியதை நிறைவேற்றித் தருவதாக ஐதீகம். 23 ஆண்டுகளாக தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பாலமுருக பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்திருவிழாவிற்கு அனைத்து பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றேன்.

கோவில் 171 - ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகாசலக் குமரன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-171 வீட்டில் பொன்னும் பொருளும் ஒருசேர தந்தருளும் ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகாசலக் குமரன் கோவில் 26.11.21 வெள்ளி அருள்மிகு கனகாசலக் குமரன் திருக்கோவில்  எழுமாத்தூர்-638104  ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: ஈரோடு 22 கிமீ மூலவர்: கனகாசலக் குமரன் தல விருட்சம்: இலந்தை மரம்  தலமகிமை: ஈரோடு-வெள்ளக்கோவில் சாலையில் ஈரோட்டில் இருந்து 22-வது கிமீ-ல் எழுமாத்தூர் கனகாசலக் குமரன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஊரின் மலைப்பகுதியில் வீற்றிருந்து அனைவருக்கும் அருளையும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குகிறான் மால் மருகன். இத்தலத்தில் முருகபெருமானின் திருநாமம் கனகாசலக் குமரன். மருமகன் குமரனின் கோவிலில் மாமன் மாலன் சந்நிதியும் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் இலந்தை மரத்தடியில் ஏழு கன்னிமார்களுடன் வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் அற்புதத் தரிசனம் தருகிறார். இங்கு வந்து அண்ணன் விநாயகரை வணங்கித் தொழுதுவிட்டு, கனகசாலக் குமரனை பக்தர்கள் வ

கோவில் 537 - நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாக சுப்பிரமணியர் கோவில்

Image
🙏🙏     தினம் ஒரு முருகன் ஆலயம்-537 நாகதோஷம் போக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாக சுப்பிரமணியர் கோவில் 27.11.2022 சனி அருள்மிகு நாகசுப்பிரமணியர் திருக்கோவில் நரிமுடுக்கு-609112 சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் இருப்பிடம்: சீர்காழி 12 கிமீ மூலவர்: நாகசுப்பிரமணியர் தலமகிமை: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி-மகேந்திரபள்ளி சாலையில் 10 கிமீ தொலைவில் உள்ள நல்லூர் என்ற கிராமத்தில் இறங்கி தெற்கே 2 கிமீ பயணித்தால் நாகதோஷம் போக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாக சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் அபூர்வமாக ஐந்து தலை நாகம் மீது நின்ற கோலத்தில் காட்சியருளுகிறார். பங்குனி உத்திர நன்னாளில் நாக சுப்பிரமணியருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு நாக சுப்பிரமணியரை வழிபட வருகின்றனர். சித்ரா பவுர்ணமி நாளில் பால்குடம், காவடிகள் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். கந்த சஷ்டி 6 நாட்கள் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருக்கார்த்திகை அன்று பரணி தீபம் காலையிலும் ம

கோவில் 536 - நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ’வேலி சந்தனமலை முருகன் கோவில்

Image
🙏🙏     தினம் ஒரு முருகன் ஆலயம்-536 ஐஸ்வர்யம் பெருக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ’வேலி சந்தனமலை முருகன் கோவில் 26.11.2022 வெள்ளி அருள்மிகு சந்தனமலை முருகன் திருக்கோவில் க்ளென்வன்ஸ் எஸ்டேட் ஓ’வேலி பேரூராட்சி கூடலூர் வட்டம் நீலகிரி மாவட்டம் இருப்பிடம்: கூடலூர் 19 கிமீ, ஊட்டி 69 கிமீ மூலவர்: தண்டபாணி தலமகிமை: நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஓ’வேலி பேரூராட்சியில் க்ளென்வன்ஸ் எஸ்டேட்டில் சந்தனமலை முருகன் கோவில் அமைந்துள்ளது, தண்டபாணி என்ற திருப்பெயரில் முருகப்பெருமான் அருள்புரிகிறார். சந்தனமலை முருகன் கோவில் குன்றின் மேலிருந்து நீலகிரி மலைத்தொடர், கேரளா மலைத்தொடர்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், அழகிய வனம் நிறைந்த மரங்கள், டீ, காபி, ஏலக்காய் தோட்டங்கள்,, பள்ளத்தாக்கு காட்சிகளை பார்க்கலாம். சுற்றுலா வரும் பயணிகள் முருகப்பெருமானையும் தரிசித்து பலன் பெற்று செல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழா 5 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட முருக பக்தர்கள் மட்டுமின்றி அருகிலுள்ள கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து

கோவில் 170 - ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவர் கோவில்

Image
🙏🙏                                                                                                                                                          தினம் ஒரு முருகன் ஆலயம்-170 ஞானமும் கல்வியும் அருளும் ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவர் கோவில் 25.11.21 வியாழன் அருள்மிகு அருள்மலையாண்டவர் திருக்கோவில்  தோரணவாவி-638055 ஈரோடு மாவட்டம்  இருப்பிடம்: பெருந்துறை 19 கிமீ மூலவர்: அருள்மலையாண்டவர் என்ற கிருபாகர சுப்பிரமணிய சுவாமி பழமை: 16-ம் நூற்றாண்டு தலமகிமை: ஈரோடு மாவட்டம் பெருந்துறைலிருந்து 19 கிமீ தொலைவில் ஞானமும் கல்வியும் அருளும் ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பழனிக்கு நிகரானது என்று போற்றப்படுவது அருள்மலை எனப்படும் தோரணவாவி முருகன் கோயில். 60 படிகள் கொண்ட சிறிய குன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. அரளி மரங்கள் சூழ ஆலயம் எழிலுறக் காட்சி கொடுக்கிறது.  இங்கு இறைவன் ஞான குருவாகக் காட்சிகொடுக்கிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது. இத்தலத்து முருகன் ஞானகுருவாக வீற்றிருப்பதாலும், நந்தியனுக்கு அருள்புரிந்ததாலும் கல்வியறிவில் குறைபாடுள்ள கு

கோவில் 535 - விழுப்புரம் சாலாமேடு பாலமுருகன் கோவில்

Image
   🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-535 வேண்டியன அருளும் விழுப்புரம் சாலாமேடு பாலமுருகன் கோவில் 25.11.2022 வெள்ளி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் சாலாமேடு விழுப்புரம்-605602 விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: விழுப்புரம் 2 கிமீ மூலவர்: பாலமுருகன் தலமகிமை: விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள சாலாமேடு பகுதியி உள்ள NGGO காலனியில் வேண்டியன அருளும் சாலாமேடு பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த அழகிய சிறிய கோவிலில் திகட்டாத அழகுடன் முருகப்பெருமான் அருள்கின்றார். பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை என முருகனுக்குரிய அனைத்து விசேஷங்களும் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். தல அமைப்பு: கோவில் கொடிமரம் மற்றும் அருகில் மயில் அழகுடன் காணப்படுகின்றன. கருவறையில் முருகப்பெருமான் பாலமுருகன் என்ற திருப்பெயருடன் இளமை அழகுடன் வேல் தாங்கி புன்னகைத் ததும்ப பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்பாலிக்கின்றார். அபிஷேக, அலங்காரம் காண்கின்ற முருக பக்தர்கள்

கோவில் 169 - கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பாலமுருகன் கோவில்

Image
   🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-169 நினைத்த காரியங்கள் நிறைவேற்றியருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பாலமுருகன் கோவில் 24.11.21 புதன் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் அகரம்-635119 கிருஷ்ணகிரி மாவட்டம் இருப்பிடம்: ஓசுர் 16 கிமீ மூலவர்: பாலமுருகன் உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானையுடன் தலமகிமை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் மாநகரிலிருந்து 16 கிமீ தொலைவில் நினைத்த காரியங்களை நிறைவேற்றியருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பாலமுருகன் கோவில். முருகப்பெருமான், இத்தலத்தில் பாலமுருகனாக அருள்பாலிக்கின்றார். இப்பகுதி வழியாக லாரியில் சரக்குகள் ஏற்றிச் செல்லும்போது தவறாமல் அகரம் பாலமுருகனை டிரைவர் வழிபட்டுச் செல்வாராம். ஒருநாள் வெளியூரில் தேங்காய் லோடு ஏற்றும்போது, லாரி டிரைவர் தேங்காய் வியாபாரிடம் பாலமுருகனுக்கு உடைக்க ஒரு தேங்காய் கேட்க. பாலமுருகனுக்கு கொம்பா முளைச்சிருக்கு? என்று கிண்டல் செய்து, தேங்காய் தர மறுத்தாராம். சில ந

கோவில் 534 - முருகப்பெருமான் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) கோவில்

Image
   🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-534 பிணிகள் முதலான அனைத்து சங்கடங்களையும் விலக்கும் முருகப்பெருமான் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) கோவில் 24.11.2022 வியாழன் அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோவில் கீழ்வேளுர்-611104 நாகப்பட்டினம் மாவட்டம் இருப்பிடம்: திருவாரூர் 15 கிமீ, நாகப்பட்டினம் 14 கிமீ மூலவர்: கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி அம்மன்: வனமுலையம்மன், சுந்தர குஜாம்பிகை, அஞ்சு வட்டம்மன் உற்சவர்: கல்யாண சுந்தரர் நாயகன்: முருகப்பெருமான் தல விருட்சம்: பத்ரி, இலந்தை தீர்த்தம்: சரவணப்பொய்கை (முருகன் உருவாக்கியது), அக்னி, சேஷ, பிரம்ம, சூரிய, சந்திர, குபேர தீர்த்தம் புராணப்பெயர்: கீவளூர், திருக்கீழ்வேளுர் பாடியவர்: அப்பர், சம்பந்தர் தலமகிமை: திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும் நாகப்பட்டினத்திலிருந்து 14 கிமீ தொலைவிலும் பிணிகள் முதலான அனைத்து சங்கடங்களையும் விலக்கும் முருகப்பெருமான் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) கோவில் அமைந்துள்ளது. வேளூர் என்ற பெயரி

கோவில் 168 - கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி ரத்தினகிரி கோவில்

Image
 🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-168 விரும்பிய வாழ்க்கைத் துணை தந்தருளும் கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி ரத்தினகிரி கோவில் 23.11.21 செவ்வாய் அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் சரவணம்பட்டி-641035 கோயம்புத்தூர் மாவட்டம் இருப்பிடம்: கோவை பேருந்து நிலையம் 13 கிமீ மூலவர்: ரத்தினகிரி முருகன் தலமகிமை: கோவை பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் விரும்பிய வாழ்க்கைத் துணையை தந்தருளும் கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி ரத்தினகிரி கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் பூப்பறிக்கும் சடங்கு (நோன்பு) என்ற நிகழ்வு மாட்டுப் பொங்கல் தினத்தன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். முறைப்பையனும், முறைப்பெண்ணும் பொங்கலுக்கு மறுநாள் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் திருமண வாழ்வுச் சிறக்க வேண்டி முருகனுக்கு மாலையணிவித்து, தங்கள் திருமணம் தடையின்றி சிறப்பாக வழிபடுவர் பக்தர்கள் தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை அமைய, திருமணத்தடை நீங்க, திருமணமாகாதவர்கள் திருமணம் நடைபெற தங்கள் கைகளாலேயே பூப்பறித்து, மாலைக்கட்டி கந்தனுக்கு அணிவித்து வழிபாடு செய்கின்றனர். பூப்பறிக்கும் விழாவையொட்டி, முருகப்