கோவில் 170 - ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவர் கோவில்

🙏🙏                                                                                                                                                          தினம் ஒரு முருகன் ஆலயம்-170

ஞானமும் கல்வியும் அருளும் ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவர் கோவில்

25.11.21 வியாழன்


அருள்மிகு அருள்மலையாண்டவர் திருக்கோவில் 

தோரணவாவி-638055

ஈரோடு மாவட்டம் 

இருப்பிடம்: பெருந்துறை 19 கிமீ


மூலவர்: அருள்மலையாண்டவர் என்ற கிருபாகர சுப்பிரமணிய சுவாமி

பழமை: 16-ம் நூற்றாண்டு


தலமகிமை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறைலிருந்து 19 கிமீ தொலைவில் ஞானமும் கல்வியும் அருளும் ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பழனிக்கு நிகரானது என்று போற்றப்படுவது அருள்மலை எனப்படும் தோரணவாவி முருகன் கோயில். 60 படிகள் கொண்ட சிறிய குன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. அரளி மரங்கள் சூழ ஆலயம் எழிலுறக் காட்சி கொடுக்கிறது. 


இங்கு இறைவன் ஞான குருவாகக் காட்சிகொடுக்கிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது. இத்தலத்து முருகன் ஞானகுருவாக வீற்றிருப்பதாலும், நந்தியனுக்கு அருள்புரிந்ததாலும் கல்வியறிவில் குறைபாடுள்ள குழந்தைகள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், கல்வி கேள்விகளில் வெற்றி கிட்டும். ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து விளக்கேற்றி முருகனை வேண்டிக்கொண்டு நல்லறிவைப் பெற்றுச் செல்கிறார்கள். கோயிலின் வெளிமண்டபத்தில் காசிவிஸ்வநாதரின் சந்நிதியும், கலைவாணியின் சந்நிதியும் அமைந்துள்ளன. இந்தத் தலத்தில் வேண்டிக்கொண்டால் மன அமைதி கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.


தலவரலாறு:

சந்தக்கவி நந்தியன் என்ற மகான் அவதரித்த தலம் இது. படிப்பறிவற்ற சிறுவனான நந்தியன் இங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அவர் முன் தோன்றிய முருகப்பெருமான், ‘தன்னைக் குறித்துப் பாடுமாறு’ கூறினார். ‘தன்னால் எப்படிப் பாடமுடியும்’ என்று நந்தியன் தவிக்க, அருகில் இருந்த கள்ளிச் செடியிலிருந்து ஒரு துளி பால் எடுத்து அவன் நாக்கில் `ஓம்' என்று எழுதியருளினார் முருகன். உடனே, மடை திறந்த வெள்ளம்போல சந்தக்கவி பாடத் தொடங்கினார் நந்தியன் என்கிறது தலபுராணம்.


தலஅமைப்பு: 

இவ்வழகு திருவாலய கருவறயில் அருள்மலையாண்டவர் என்ற கிருபாகர சுப்பிரமணிய சுவாமி ஞானகுருவாக இருந்து கல்வி செல்வம் ஆகியவற்றை அள்ளி அள்ளி வழ்ங்கி அருள்பாலிக்கிறார். சுவாமி பழனி திருத்தலம் போலவே தேவியர் வள்ளி, தெய்வானை இன்றி தனிப்பெரும் வள்ளலாக காட்சி தந்தருளுகிறார்.


இக்கோவில் பிரகாரத்தில் விநாயகர், இடும்பன் சனீஸ்வரர், ஏழு கன்னிமார்கள். சனீஸ்வரர்,ஆகியொர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

கோவிலின் வெளிச்சுற்றில் காசிவிசுவநாதர் மற்றும் கலைவாணி கருணையுடன் பக்தர்களுக்கு ஆசிகளும் மன அமைதியையும் அருளுகின்றனர்..


திருவிழா:

தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, , பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி 


பிரார்த்தனை:

கல்வி ஞானம் வேண்டி,, மன அமைதி கிடைத்திட


நேர்த்திக்கடன்:

அபிஷேக அலங்கார, சிறப்பு பூஜைகள், புதுத் துணி சாத்துதல்


படிப்பறிவில்லாதவர்களைக் கூட கவிப்பாட வைத்திடும் ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவரை குருநாளில் தரிசித்து ஞானமும் அருளும் பெறுவோம்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - ஞானமும் கல்வியும் அருளும் ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவர் என்ற கிருபாகர சுப்பிரமணிய சுவாமி


படம் 2 -  மன அமைதியும் ஞானமும் அருளுகின்ற ஈரோடு மாவட்டம் தோரணவாவி அருள்மலையாண்டவர் கோவில்


Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்